அவசர எச்சரிக்கை..! WhatsApp இல் வரும் மோசடி லிங்க்..! விவரத்தை பதிவிட்டால் பணம் காலி.!
ஸ்ரீலங்கன் மக்களை குறி வைத்து, ”நய சஹானா சஹானா 2020”என்ற பெயரில், மக்களின் மொபைல் எண்ணீற்கு வாட்ஸ் அப்பில் ஒரு லிங்க் வருகிறது. அதில் தனி நபர் வங்கி விவரங்களை கேட்டு ஒரு டாக்குமெண்ட் வருகிறது
அவசர எச்சரிக்கை..! WhatsApp இல் வரும் மோசடி லிங்க்..! விவரத்தை பதிவிட்டால் பணம் காலி.!
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆன்லைன் மோசடியை தவிர்க்க சைபர் கிரைம் நட வடிக்கை எடுத்து வருகிறது. மேலும் வங்கி வாடிக்கையாளர்களிடம் இருந்து otp எண்களை பெற்று வங்கி திருட்டில் ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு குற்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுகிறது. இதனை தவிர்க்க சைபர் கிரைம் அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது
இந்தநிலையில் ஸ்ரீலங்கன் மக்களை குறி வைத்து, ”நய சஹானா 2020”என்ற பெயரில், மக்களின் மொபைல் எண்ணீற்கு வாட்ஸ் அப்பில் ஒரு லிங்க் வருகிறது. அதில் தனி நபர் வங்கி விவரங்களை கேட்டு ஒரு டாக்குமெண்ட் வருகிறது
அது ஏமாற்று வேலை என்றும், வங்கிக்கணக்கு விவரங்களை சேகரித்து அதன் மூலம் வங்கி கணக்கில் உள்ள பணத்தை எடுப்பதற்காக போலியாக ஒரு லிங்கை அனுப்பி, குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு உள்ளது ஒரு கும்பல் என கணினி அவசர நடவடிக்கை பிரிவு (CERT ) மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.
வாட்ஸ் ஆப்பில் அனுப்பப்படும் Google doc phishing scam -இல் ஸ்ரீலங்கன் மக்கள் யாரும் அவர்களது வாங்கி கணக்கு விவரங்களை பதிவு செய்யவேண்டாம் என CRIB, FINCSIRT எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.