கொரோனா எதிரொலி! மத்திய அரசு வெளியிடப்போகும் "முக்கிய அறிவிப்பு"..! 

வரும் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் 15 நாட்கள் நீடிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக, அத்யாவசியப் பொருட்கள் கிடைப்பதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என மாநில தலைமை செயலாளர்களுக்கு உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது தமிழகத்தில் மேலும் 48 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. நோய் தொற்றியவர்களின் எண்ணிக்கை 738-ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 156 பேருக்கு நோய்த்தொற்று ஏற்பட்டு உள்ளது. தேனி மாவட்டத்தில் மட்டும் ஒரே நாளில் 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது

அதே நேரத்தில் சென்னையில் 70 வயது மூதாட்டி கொரோனாவிலிருந்து குணமடைந்தார். அவருக்கு பழக்கூடை கொடுத்து வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர் மருத்துவக்குழு. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 5,734 ஆக உயர்ந்து உள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 149லிருந்து 166ஆக உயர்வு உள்ளது. குணமடைந்தோர் எண்ணிக்கை 411லிருந்து 473ஆக அதிகரித்து உள்ளது என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஒரு  நிலையில், ஊரடங்கு உத்தரவை அடுத்த சில வாரங்களுக்கு நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு மாநில அரசுகள் கோரிக்கை வைத்து உள்ளது. இதனை தற்போது மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவை நீடிப்பது குறித்து முக்கிய  முடிவு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மக்களும் அவரவர் சுய ஒழுக்கம் மற்றும் சமூக விலகளை கடைப்பிடிக்கவேண்டும் என்பதனை உணர்ந்து கொரோனாவிற்கு எதிரான நீண்ட போராட்டத்தை வெல்ல வேண்டும்.