"மருத்துவ காப்பீடு"..! "மக்களை கைவிடாத மத்திய அரசு"...! அடுத்த அதிரடி அறிவிப்பை வெளியிட்டு "அசத்தல்"..!

21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில் மேலும் அடுத்த இரண்டு வாரங்களுக்கு நீட்டிக்கப்படும் என்ற தகவல் வெளியாகி உள்ளது. இப்படி ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு காரணத்திற்காகவும் ஏழை எளிய மக்கள் பாதித்து விடக் கூடாது என்பதில் மத்திய அரசும் சரி மாநில அரசும் சரி மிகப்பெரிய கவனம் செலுத்தி வருகிறது.

அந்த வகையில் தற்போது பிரதமரின் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் சிகிச்சை அளிக்க தனியார் மருத்துவமனைகளை சேர்க்கும் திட்டத்தை தேசிய நல்வாழ்வு ஆணையம் தொடங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏழை எளிய மக்கள் 50 கோடி பேருக்கு தரமான மருத்துவம் கிடைக்க வழிவகை ஏற்படும்.

இதயநோய், புற்றுநோய் உள்ளிட்ட 500 வகையான நோய்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு ரூபாய் 5 லட்சம் மதிப்பில் வரை மருத்துவ காப்பீடு பெரும் சலுகையை மத்திய அரசு வழங்கி வருகிறது. பிரதமர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் எத்தனை சலுகைகள் இருந்தும் ஒருசிலர் இன்றளவும் அது குறித்த முழு விவரம் தெரியாமல் பயன்படுத்தாமல் இருக்கின்றனர். இந்த ஒரு நிலையில் கொரோனா பாதிப்பும் ஒருபக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைகளில் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுதவிர பல்வேறு இடங்களில் கொரோனா அறிகுறிகளுடன் இருப்பவர்களை தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஒரு நிலையில் மற்ற நோயாளிகள் அரசு மருத்துவமனைக்கு வருவதை சற்று குறைக்கும் வகையிலும் நோய் பரவுவதை தடுக்கும் வகையிலும் மத்திய அரசு மேலும் ஒரு அதிரடி நடவடிக்கையில் இறங்கி உள்ளது. அதன் படி, அரசு மருத்துவமனைகள் மற்றும் பட்டியலிடப்பட்ட தனியார் மருத்துவமனைகளில் மருத்துவ காப்பீடு பயனாளிகள் சிகிச்சை பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்த திட்டத்தில் சிகிச்சை அளிப்பதற்கு தனியார் மருத்துவமனைகளை விரைந்து சேர்ப்பதற்கான பணியை தேசிய நல்வாழ்வு ஆணையம் தொடங்கியுள்ளது. இதற்கான வழிமுறைகளை https://www.pmjay.gov.in/ என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் சேர்ந்து, மக்களுக்கு சிகிச்சை வழங்க தனியார் மருத்துவமனைகள் தானாகவே விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.இது போன்ற இக்கட்டான சூழ்நிலையில் உலகிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியா இவ்வளவு சிறப்பாக செயல்பட்டு வருவது அனைவரின் கவனத்தை ஈர்த்துள்ளது.