மத்திய அரசு அதிரடி..! எந்த வங்கி கணக்காக இருந்தாலும் சரி.. பணம் எடுக்க தபால் நிலையம் மட்டும் போதும் ..! 

எந்த வங்கியில் கணக்கு வைத்திருந்தாலும் தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள வங்கி சேவை திட்டத்தின் மூலமாக பணம் எடுக்கலாம் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தபால் நிலையங்களில் வங்கி சேவை திட்டம் தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் கீழ் ஒரு கோடி தபால் வங்கி கணக்குகள் இந்த ஓராண்டில் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 லட்சம் தபால் வங்கி கணக்குகள் உள்ளது. இந்த நிலையில் இந்த சேவையை மேலும் விரிவுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வங்கி கணக்கை ஆதார் எண்ணுடன் இணைத்து இருந்தால், எந்த வங்கி கணக்காக இருந்தாலும் தபால் நிலையங்களில் தொடங்கப்பட்டுள்ள தபால் வங்கி சேவையின் மூலமாக பணம் எடுத்துக்கொள்ளலாம் என ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளார்.

தபால் வங்கி சேவையை தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவையொட்டி நேற்று நடைப்பெற்ற நிகழ்ச்சியில் ரவிசங்கர் பிரசாத் அதிகாரபூர்வமாக இதனை தெரிவித்துள்ளார். கடந்த ஓராண்டில் தபால் வங்கி சேவையில் ஒரு கோடி கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. அடுத்து வரும் ஆண்டில் 5 கோடி வங்கி கணக்காக உயர்த்த வேண்டும் என தெரிவித்து உள்ளார். 

மேலும் தபால் வங்கி சேவையை சிறப்பாக செயல்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்பு விருதுகளும் வழங்கப்பட்டது. இந்திய அளவில் முதல் விருதை தமிழகத்திற்கும் அதேபோன்று டிஜிட்டல் கிராமம் திட்டத்தில் மூன்றாவது இடத்துக்கான விருதை தமிழகத்திற்கு வழங்கி சிறப்பு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.