கிளப்பியது அடுத்த பூகம்பம்..! வெளிவருகிறது நீட் தேர்வு முறைகேடு ...! சிபிசிஐடி போலீசார் அதிரடி...! 

2018 ஆம் ஆண்டு நடந்த நீட் தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிஎஸ்சி அதிகாரிகளுக்கு விளக்கம் கேட்டு சம்மன் அனுப்பி உள்ளது தமிழக சிபிசிஐடி போலீசார். 

அதன்படி தேர்வு நடத்திய அதிகாரிகளிடம் சிபிசிஐடி போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர். மேலும் இது குறித்து மருத்துவ கல்வி இயக்குநரகத்திடம் விளக்கம் கேட்டு விசாரணை மேற்கொள்ள உள்ளது.

குறிப்பாக சிபிஎஸ்சி தேர்வு நடத்திய இரண்டு முக்கிய அதிகாரிகளிடம் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும், அந்த இருவர் யார் என்பது குறித்தும் இப்போது தெரியப்படுத்தவில்லை.  இதற்கிடையில் பெங்களூரை சேர்ந்த இடைத்தரகர் ஒருவரிடம் விசாரணை மேற்கொள்ள தனிப்படை அமைத்து தீவிரமாக தேடப்பட்டு வருகிறது.

யார் அந்த இடைத்தரகர் ? எந்த பயிற்சி மையத்தை வைத்துள்ளார்? அவருக்கு மற்றவர்களுடனான தொடர்பு என்ன? எப்படி முறைகேட்டில் ஈடுபட்டார் ? என பல கோணங்களில் விசாரணை மேற்கொள்ள இருக்கிறது.

மளமளவென குறைந்த தங்கம் விலை..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா..?

மேலும் இவரை பிடிப்பதற்காக ஏற்கனவே நீட் தேர்வு முறைகேடு நடத்தியுள்ள தனுஷ் குமார் என்பவரை போலீசார் கைது செய்து உள்ளனர். தற்போது இந்த இடைத்தரகர்களை பிடிப்பதற்கு தனுஷ்குமார் உதவி தேவைப்படும் என்பதால் 15 நாள் காவலில் எடுத்து விசாரணை செய்ய சிபிசிஐடி போலீசார் முடிவு செய்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.