careful dont use nail remover
நகங்களை வளர்க்க பெரும்பாலான பெண்கள் ஆசைபடுவார்கள். முகத்திற்கு தரும் முக்கியத்துவத்தை நகங்களுக்கு தருவதில்லை. இதனால் நகங்கள் பாதிக்கப்படுகிறது. நகங்களுக்கும் பராமரிப்பு அளித்தால் நகங்கள் அழகுடன் மிளிரும்.
அடிக்கடி நகம் வெட்டி அழுக்குகளை கழுவி சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். சிலருக்கு நகம் கடினமாக இருக்கும், இதனால் நகங்களை வெட்டுவதற்கு கஷ்டமாக இருக்கும். கடின நகம் உள்ளவர்கள் குளித்தவுடன் நகம் வெட்டினால், நகம் ஈரத் தன்மையுடன் இருப்பதால், எளிதாக வெட்ட வரும்.

அதே போல், தேங்காய் எண்ணெய், ஆலிவ் எண்ணெய் தடவி சிறிது நேரம் கழித்து வெட்டினாலும் எளிதாக வெட்டலாம். ஈரமாக இருக்கும் போது ஷேப் செய்தால், நகங்கள் உடைவதற்கான வாய்ப்பு உள்ளது. எனவே, நகங்கள் ஈரமாக இருக்கும்போது ஷேப் செய்வதை தவிருங்கள்.
தரமான நெயில் பாலிஷ்களை உபயோகித்தால் நகத்திற்கு எவ்வித பாதிப்பும் வராது. நகங்கள் அடிக்கடி உடைந்து போகிறவர்கள், சிறிதளவு ஆலிவ் ஆயிலில் நகங்களை மூழ்கும் படி வைத்தால்,நகங்கள் உறுதியாகும். நெயில் பாலீஷ் ரிமூவரை அடிக்கடி பயன்படுத்துவது நகத்திற்கு தீங்கு விளைவிக்கும். எனவே, அவற்றை அடிக்கடி பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும். அதிலுள்ள ரசாயனங்கள் நகத்திற்கு கேடு விளைவிக்கும். அடிக்கடி இதைப் பயன்படுத்துவதால் நகங்கள் பாதிப்படையும். நெயில் பாலீஷ் ரிமூவருடன், சிறிது கிளிசரின் கலந்து பயன்படுத்துவது நல்லது.

தினமும் நெயில் பாலீஷ் உபயோகிப்பதால் நகங்களின் நிறம் மங்கி காணப்படும். எனவே வாரத்தில் சில நாட்கள் நெயில் பாலீஷ் உபயோகிக்காமல், இருப்பது நல்லது.
எலுமிச்சை சாற்றை நகத்தில் தடவி சிறிது நேரம் கழித்து கழுவினால், நகங்கள் பளபளப்பாக இருக்கும்.
நகங்கள் உறுதியற்று உடைவதற்கு இரும்பு மற்றும் கால்சியம் போன்ற சத்துக்குறைபாடுகளே காரணம். எனவே நகங்கள் ஆரோக்கியமாக வளர ஊட்டச்சத்து நிறைந்த காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை சாப்பிட வேண்டும்.
