பேஸ்புக், ட்விட்டர் அதிரடி சரவெடி நடவடிக்கை..!! இனி இஸ்டத்துக்கு பதிவிட முடியாது...!!!

இதை நல்லா கேட்டுகோங்க, உண்மையை சொல்ல வேண்டும் என்றால், நம்மில் பேஸ்புக், ட்விட்டர் பயன்படுத்தாதவர்கள் யாரும் இல்லை எனலாம். அந்த அளவுக்கு விஞ்ஞான வளர்ச்சி...!!! இதில் நாமும் சேர்ந்தே பயணிக்கிறோம்.

நம் வாழ்க்கைக்கு தற்போது சமூக வலைத்தளங்கள் உண்மையில் தேவையான ஒன்றுதான்......அதாவது நல்ல கருத்துக்களை தெரிந்து கொள்வதற்கும், உலக நடப்புகளை புரிந்து கொள்வதற்கும், இன்னும் சொல்ல போனால், ஆரோக்கியமான ஒரு உறவுமுறை சமூக வலைத்தளத்தில் இருந்தால் மட்டுமே அது நமக்கு ஆரோக்கியம்........ நம்மை சார்ந்தவருக்கும் ஆரோக்கியம்........

இதில் நாம் உற்று நோக்க வேண்டிய விஷியம் என்ன வென்றால், சமூக வலைத்தளத்தில், நிறைய தவறான பதிவுகள் செய்வதும் , தவறான கருத்தை சொல்வதும் நடக்கிறது. ஏன் ? ஒரு சில பொய்யான செய்தி கூட , மக்களிடம் சேர்கிறது.

இதனையெல்லாம் தவிர்க்கும் பொருட்டு, பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது.

அதாவது நாம் பதிவிடும் பொழுதோ அல்லது கருத்து தெரிவிக்கும்போதோ, அதில் பயன்படுத்தப்பட்டுள்ள வார்த்தைகளை கொண்டு, அது தவறான கருத்தா என முன்கூட்டியே பதிவு செய்துள்ள கருத்துக்களை ஒப்பிட்டுபார்த்த பின்னரே, அதனை பதிவு செய்ய முடியும் வகையில் ஒரு அற்புத திட்டத்தை கொண்டு வருகிறது பேஸ்புக் மற்றும் ட்விட்டர் ...!!!

இதனால், இனி நம்ம இஷ்டத்துக்கு எதையும் பதிவு செய்ய முடியாது........

நல்ல விஷயம் தானே ........வரவேற்கலாமே.......!!!!