பட்ட பகலில்... சென்னை சிட்டியில்.. கொஞ்சமும் அசராமல் என்ன செய்கிறார்கள் பாருங்கள்..! நடவடிக்கை எடுக்குமா காவல் துறை..! 

சென்னை அண்ணாநகர் பகுதியில் உள்ள MMDA காலனியில் மக்கள் நடமாட்டம் அதிகமாக  உள்ள வாட்டர்டாங்க் என்ற பகுதியில் கடந்த சில நாட்களாக கஞ்சா விற்பனை நடந்து வருவதாக  தகவல் கிடைத்து உள்ளது.

மேலும் mmda சமுகநலகூடம் அருகிலும் போதைக்கு அடிமையான இளைஞர்கள் குடித்துவிட்டும், கஞ்சா அடித்துக்கொண்டும் பொதுமக்களுக்கு இடையூறு செய்வதாக புகார் எழுந்துள்ளது. மேலும் அவ்வழியாக செல்லக்கூடிய பெண்களை கேலி கிண்டல் செய்வதும், போதைக்கு அடிமையாக ஆங்காங்கு கீழே விழுந்து கிடப்பதுவுமாக இருப்பதால் பெண்களுக்கு பெரும் அச்சிற்றுதலாக உள்ளது என பொதுமக்கள் கருத்து தெரிவித்து உள்ளனர் 

 

எனவே,இங்குள்ள சமுக நலக்கூடம் அருகில் கண்காணிப்பு கேமராவை பொருத்தி கஞ்சா விற்கும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்து உள்ளனர்.

இந்த விவகாரம் சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் அவர்கள் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என ஆதாரத்தோடு புகைப்படத்தை பதிவிட்டு கோரிக்கை வைத்து உள்ளனர் அப்பகுதி மக்கள்