Asianet News TamilAsianet News Tamil

கன்னித்திரை தொடர்பாக சிறப்பு அறுவை சிகிச்சை   கண்டுபிடிப்பு....!! மருத்துவர் விளக்கம் ..!!

can we-have-the-kanni-layer-again
Author
First Published Jan 11, 2017, 5:43 PM IST


 கன்னித்திரை தொடர்பாக சிறப்பு  அறுவை  சிகிச்சை கண்டுபிடிப்பு....!! மருத்துவர் விளக்கம் ..!!

பெண்களுக்கு  மிக முக்கியமான  ஒரு அம்சம்   எது என்றால் “ பெண்ணின்  கன்னித்திரை “. ஒரு  பெண்ணின்  கன்னித்திரை  தான்  வாழ்வில்  ஒரு முக்கிய அங்கம்  வகிக்கிறது.ஆனால்  ஒரு சில  பெண்கள் , விளையாட்டு  வீராங்கனைகளாக உள்ளனர்.

விளையாட்டு  வீராங்கனைகள் :

விளையாட்டு  வீராங்கனைகள் , நடன மங்கையர்கள்  போன்றோர்  கடுமையான  பயிற்சியில் ஈடுபடுவதால்  அவர்களது கன்னித்திரை   எளிதில்  கிழிந்து  விடுகிறது. ஆனால் இத்தகைய  பெண்கள்  திருமணம்  செய்து  கொள்ளும்  போது  வாழ்வில் பல பிரச்சனைகளை  சந்திக்க  நேரிடுகிறது.

ஆனால், இதற்கெல்லாம்  மாற்றாக “ அறுவை சிகிச்சை  மூலம்  இழந்த  கன்னித்திரையை  மீண்டும்  பெற  முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இழந்த  கன்னித்திரையை மீண்டும் பெறுவது எப்படி ..?

ஹைதராபாத்தில் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மருத்துவர் பவானி பிரசாத் , இழந்த  கன்னித்திரையை மீண்டும்  பெறுவது  எப்படி  என  விளக்கம்  அளித்துள்ளார்.

“எந்த  ஒரு  ஆண் மகனும் , தன் மனைவி  கன்னித்தன்மையுடன்  தான்  இருக்க  வேண்டும்  என  நினைப்பர். ஆனால் பரதநாட்டியம், விளையாட்டு பயிற்ச்சிகளில் ஈடுபடுபவர்களுக்கு இந்த கன்னித்தன்மை உறுதி செய்யும் சவ்வு கிழிய வாய்ப்பு உள்ளது.

குறிப்பு:

இதனால்  இது போன்று  விளையாட்டுகளில்  கன்னித்தன்மை இழந்தவர்களுக்கு  மட்டுமே, கிழிந்த சவ்வுக்கு பதிலாக வேறு சவ்வு வைத்து அறுவை சிகிச்சை   செய்யப்படுவதாக  தெரிவித்துள்ளார்.

மேலும் பேசிய  அவர், 20-30 வயதுக்குட்பட்ட ஏராளமான பெண்கள் இதுபோன்று அறுவை சிகிச்சை செய்து கொள்ள முன்வருகிறார்கள் என பவானி பிரசாத் தெரிவித்துள்ளார்  என்பது குறிபிடத்தக்கது.

 

 

 

Follow Us:
Download App:
  • android
  • ios