இனி குழப்பம் வேண்டாம். ஹேண்ட் பேக் வாங்கும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.
ஹேண்ட் பேக் அல்லது கைப்பை (Handbag) என்பது பெண்களுக்கு வெளியே செல்லும் போது, மிகவும் முக்கியமான ஒன்றாகும். சிலர், 'Boy friend'' போல எங்கு சென்றாலும் கூடவே எடுத்து செல்வர். அந்த அளவிற்கு ஹேண்ட் பேக், மீது அதீத பிரியம் கொண்டிருப்பர். நமக்கு தேவையான அனைத்தையும் அதற்குள் அடக்கி, வைத்து எடுத்துச் சென்றுவிடலாம். சிலர், ஹேண்ட் பேக் இல்லாம வெளியே செல்ல மாட்டார்கள். ஒரு பெண்ணின் ஹேண்ட் பேக்கை, பார்த்தாலே, அந்த பெண்ணை பற்றி, ஒரு அளவிற்கு கணிக்க முடியும் என்பார்கள்.

சிலர், செண்டி மென்ட் கருதி ஒரே ஒரு ஹேண்ட் பேக், பயன்படுத்துவர். சிலர், தங்களின் உடைக்கு ஏற்ற வகையில் ஹேண்ட் பேக்கை மாற்றுவார். அப்படி வாங்கும் ஹேண்ட் பேக்குகள் நீண்ட நாட்கள் உழைக்க வேண்டும் அல்லவா. மேலும், கடைக்கு சென்றால் எந்த ஹேண்ட் பேக்குகள் வாங்குவது, எப்படி பார்த்து வாங்குவது என்ற குழப்பம் நம்மில் பலருக்கு இருக்கும். இனி குழப்பம் வேண்டாம். ஹேண்ட் பேக் வாங்கும்போது, கீழே கொடுக்கப்பட்டுள்ள 6 வழிமுறைகளை கட்டாயம் பின்பற்றுங்கள்.
விலைக்கேற்ற தரம்:
நீங்கள் கொடுக்கும் விலைக்கான தரத்துடன் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். நீண்ட காலம் உழைக்கும் வகையிலான கைப்பை சிறிது விலை கூடுதல் என்றாலும் தயங்காமல் வாங்கலாம். ஏனென்றால் மலிவாக இருக்கிறதே என வாங்கினால், சிறிது நாட்களிலேயே, கைபிடி இணைப்பு, தையல்கள் பிரிந்து உபயோகம் அற்றதாகி விடும். ஹேண்ட்பேக்கின் கைப்பிடி உறுதியாக உள்ளதா என முதலில் கவனியுங்கள். இறுதியில், நீங்கள் கொடுக்கும் பணத்திற்கான மதிப்பு அதற்கு உள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும். தற்போதைய சந்தை விலையை ஆராய்ந்து முடிவெடுப்பது நல்லது.
பன்முகத்தன்மை:
கைப்பை தேர்வு செய்யும் போது, அவை பல விஷயங்களுக்கு பயன்படக்கூடிய வகையில் வாங்குவது நல்லது. இது அலுவலகத்திற்கு ஒன்று, நெடுந்தூர பயணத்திற்கு ஒன்று என பலவகையான கைப்பைகளை வாங்கிக் குவிப்பதை தவிர்க்க உதவும். மேலும் ஒரே ஒரு ஸ்ட்ராப்பை மாற்றுவதன் மூலமாக பலவிதங்களில் பயன்படும்கைப்பைகளை வாங்கலாம்.

பயன்படுத்தியுள்ள மெட்டீரியல்
உங்கள் உபயோகத்தின் அடிப்படையில் கைப்பையின் எந்த மெட்டீரியலில் தேவை என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும். வேகன் லெதர் (Vegan leather ) பைகளுக்கு தற்போது சந்தையில் டிமாண்ட் உள்ளது. அசல் தோல் பைகளுடன் ஒப்பிடும்போது விலை குறைவாகவும், நீடித்து உழைப்பதாகவும் இருப்பது கூடுதல் சிறப்பு. சில பிராண்டுகள் ஸ்டைலான, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற சணல் பைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது.
கம்பார்மெண்டுகள்:
கம்பார்மெண்டுகள் குறைவாக உள்ள கைப்பைகள் எளிமையானதாகத் தோன்றினாலும், பல வகை பொருட்களை பிரித்து, தனித்தனியாக விக்க, அதிக கம்பார்மெண்டுகள் கொண்ட கைப்பைகள் ஒரு வரப்பிரசாதமாகும். உங்கள் பொருட்களை பிரித்து ஒழுங்காக வைத்தால், தேவைப்படும் நேரத்தில் அவற்றை எளிதாகக் கண்டறியலாம். இருப்பினும், இது தனிப்பட்ட்ட நபரின் விருப்பம் மற்றும் பயன்பாட்டைப் பொறுத்தது.

கலர் முக்கியம்:
கைப்பையின் நிறங்கள் உங்கள் ஆளுமையை வரையறுப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றன. கருப்பு, பழுப்பு மற்றும் வெள்ளை போன்ற நடுநிலை நிறங்கள், எந்த ஆடைகளுக்கும் பொருத்தமானதாக இருக்கும். முன்பு கறுப்பு மிகவும் விரும்பப்பட்ட வண்ணங்களில் ஒன்றாக இருந்தபோதிலும், இப்போது, சிவப்பு, நீலம் போன்ற அடர் நிறங்களுடன், பல்வேறு வகையிலான லைட் நிறங்களும் வந்து விட்டன. இதனை உங்கள் விருப்படியும், பேஷனின் அடிப்படையிலும் தேர்ந்தெடுக்கலாம்.
