ஐ.ஏ.எஸ் ஆகிறார் பேருந்து நடத்துநர்..! தொலைதூர கல்வி .. "நோ" கோச்சிங் சென்டர்... தினமும் 5 மணி நேர படிப்பு.. 8 மணி நேர வேலை...! 

கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து நடத்துனர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்று மாபெரும் சாதனை படைத்துள்ளதால் பொதுமக்கள் மத்தியில் பெரும் வாழ்த்து மழை பெருகி வருகிறது

கர்நாடக மாநிலத்தில் உள்ள மாண்டியா மாவட்டத்தில் உள்ளது மலவல்லி கிராமம்.இந்த கிராமத்தில் பிறந்து வளர்ந்த 29 வயதான மது, கடந்த ஜூன் மாதம் நடந்த யூபிஎஸ்சி முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். இந்த தருணத்தில் இந்த ஆண்டு வருகிற மார்ச் மாதம் 25ஆம் தேதி நடைபெற உள்ள நேர்காணலுக்கு தயாராகி வருகிறார் மது. இதில் தேர்ச்சி பெற்ற உடன் நடத்துநர் மது ஐஏஎஸ் அதிகாரி மதுவாக மாற உள்ளார். இவரைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் வேலை நேரம் போக தினமும் 5 மணி நேரம் படிக்கக் கூடியவர்.  நான்கு மணிக்கே எழுந்து படிப்பதை வழக்கமாகக் கொண்ட இவர் வேறு எந்த கோச்சிங்  சென்டருக்கும் செல்லாமல் சுயமாகவே படித்து வந்துள்ளார்.

 

 அவரது குடும்பத்தில் இவர்தான் படித்தவர். 19 வயதில் நடத்துனர் பணியில் சேர்ந்த இவர் இளநிலை முதுநிலை படிப்புகளை தொலைதூர கல்வி வழியாக பயின்று வந்துள்ளார். பின்னர் அரசு பணியில் சேர வேண்டும் என்பது அவருடைய விருப்பம் என்பதால் கடந்த 2014ஆம் ஆண்டு கர்நாடக ஆட்சிப் பணித் தேர்வு எழுதிய அவர் தோல்வியை தழுவினார். இருந்த போதிலும் மனம் தளராமல் யுபிஎஸ்சி தேர்வுவுக்கு தொடர்ந்து தயாராகி வந்தார். இந்த நிலையில் 2018 ஆம் ஆண்டு எழுதிய தேர்வில் தோல்வி ஆனாலும் விடா முயற்சியால் தற்போது வெற்றி பெற்று உள்ளார். இவருக்கு மிகுந்த ஊக்கத்தை அளித்து வந்தது பெங்களூரு மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஷிகா ஐஏஎஸ் என்பது என்பது குறிப்பிடத்தக்கது