bride and groom escaped during their marriage

தனி தனியாக ஓடி போன மணமக்கள்..! ஏமாந்து வாயடைத்து போன உறவினர்கள்...!

கர்நாடக மாநிலத்தில்,ஏற்பாடு செய்யபட்டிருந்த திருமண நிகழ்ச்சியில் மணமக்கள் இருவரும் ஆளுக்கோர் பக்கமாக ஓடிப்போன சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

கர்நாடக மாநிலத்தை அடுத்த மலூர் கிராமத்தை சேர்ந்தவர் மாற்று திறனாளியான குரேஷ்க்கும்,சவுமியா என்ற பெண்ணிற்கும் திருமணம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது சவுமியாவின் குடும்பத்தினர் கொஞ்சம் நேரமாகியும் வரவில்லையாம்.ஆனால் அவர்களுடைய மற்ற உறவினர்கள் திருமண மண்டபத்திற்கு வருகை புரிந்து உள்ளனர்.

நேரம் ஆக ஆக பின்னர் தான் தெரியவந்துள்ளது சவுமியாவுக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லாததால்,அவர் வீட்டை விட்டு ஓடிபோகி உள்ளார்.

இதனை தொடர்ந்து, நிச்சயிக்கப்பட்ட திருமணம் நின்று போகாமல் இருக்க, சவுமியாவின் தூரத்து சொந்தக்கார பெண் ஒருவரை குரேஷ்க்கு மணம் முடித்து வைக்க பெரியவர்கள் ஒன்று கூடி பேசி முடிவு செய்து உள்ளனர்.

பின்னர் குரேஷ் க்கு இந்த திருமணத்தில் இஷ்டம் இல்லாததால்,தான் அழகு நிலையம் சென்று வருகிறேன் என கூறி அவரும் எஸ்கேப் ஆகி உள்ளார்.

அவருடைய மொபைல் எண்ணிற்கு கால் செய்தாலும் சுவிட்ச்ஆப் செய்துள்ளார் குரேஷ்.

இந்த சம்பவத்தால் உறவினர்கள் அனைவரும் சும்மா வந்து,வேடிக்கை பார்த்து விட்டு சென்றதுப்தியையும்,மன வேதனையையும் ஏற்படுத்தி உள்ளது.