Breathing exercise: எந்த ஒரு தொற்றுக்கிருமி உருமாறி வந்தாலும் ,நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
எந்த ஒரு தொற்றுக்கிருமி உருமாறி வந்தாலும் ,நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.
அதில் ஒன்று தான் ரூல் ஆஃப் த்ரீஸ் (Rule of threes).இது ஒரு சுவாசப் பயிற்சி ஆகும். இதன் கீழ் நீங்கள் மூன்று முறை ஆழமாக சுவாசிக்க வேண்டும், பின்னர் மூன்று முறை இரும வேண்டும் மற்றும் இதை மூன்று முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.

கடைபிடிப்பது எப்படி?
முதலில், நுரையீரல் விரிவாக்கத்திற்கு ஈர்ப்பு விசையை அனுமதிக்க இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும். உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்.
பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும். மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது, மூன்று முறை வலிமையாக இரும வேண்டும். இந்த மொத்த மூச்சு பயிற்சியையும் மூன்று முறை செய்யவும்.
உங்கள் மூக்கின் வழியாக ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிப்பதன் விளைவாக கீழ் விலா எலும்புக் கூண்டு விரிவடையும், இது வயிற்றை முன்னோக்கி நகர்த்தவும் அனுமதிக்கிறது. மேலும் இந்த பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.
நிமிர்ந்து அமரவும். கை சின் முத்திரையில் வைக்கவும். இரு நாசி வழியாக மிக மிக மெதுவாக முடிந்த அளவு மூச்சை இழுக்கவும். உடன் மிக மிக மெதுவாக மூச்சை இரு நாசி வழியாக வெளிவிடவும். மீண்டும் இதே போல் நிதானமாக மூச்சை இழுத்து மிக மெதுவாக மூச்சை வெளிவிடவும். மூச்சை வெளியிடும்பொழுது உடல் முழுக்க மூச்சு பரவுவதாக எண்ணவும். ஒவ்வொரு அணுக்களும் மூச்சாற்றல் பெறுவதாக என்னனவும்.இவ்வாறு இருபது முறைகள் செய்யவும். இதனை காலை மதியம் மாலை இரவு சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.

பலன்கள்:
உடல் முழுக்க பிராண சக்தி நன்றாக இயங்கும். நுரையீரல் இயக்கம் மிகச் சிறப்பாக இருக்கும். நல்ல காற்றை நுரையீரல் உள்வாங்கி, அசுத்தக் காற்றை வெளியேற்றும். எந்த ஒரு தொற்றுக்கிருமியும், வைரசும் உடலில் தங்காமல் வாழ நுரையீரல் இயக்கம் நன்றாக இருக்கும். பயமின்றி வாழலாம்.
மேலும், யோகாசனம், முத்திரை, மூச்சுப்பயிற்சி, தியானம் போன்றவற்றை தினமும் காலை மாலை பயிற்சி செய்யுங்கள். நுரையீரலில் ஆழமாக ஆக்சிஜனை பெறுவதன் மூலமாகவும், சளி மற்றும் பிற திரவங்களை வெளியேற்றுவதன் மூலமும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு வருவதன் மூலமாகவும் நம்மால் நுரையீரலின் திறனை அதிகரிக்க முடியும். இது கரோனா மற்றும் பிந்தைய கரோனா சிக்கல்களுக்கு தீர்வாக மாறுகின்றனர் என்று குறிப்பிடுகின்றனர்.எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் நுரையீரலை பாதுகாப்பது அவசியம்.
