Asianet News TamilAsianet News Tamil

Breathing exercise: கரோனோ தொற்றிடமிருந்து நுரையீரலை பாதுகாக்கும் மூச்சு பயிற்சி...! கடைபிடிப்பது அவசியம்...

கரோனோ தொற்றிடமிருந்து  நம் நுரையீரலை, பாதுகாக்கும் மூச்சு பயிற்சிகளை மேற்கொள்வது அவசியம்.

Breathing exercise for lungs
Author
Chennai, First Published Jan 20, 2022, 6:38 AM IST

உலகம் முழுவதிலும் கரோனா என்கின்ற கொடிய நோய்க்கு எதிராக போராடி வரும் நிலையில், பலர் உடல் ரீதியாகவும், பலர் மன ரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமின்றி, இந்த வைரஸ் கிருமியால்  பலர் பொருளாதார ரீதியாகவும், உணர்வு ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். உலகில் உள்ள அனைவரும் இந்த கண்ணுக்கு தெரியாத கிருமியால், ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனர் என கூறலாம். 

இது போன்ற நிலையில் நம்மை கொரோனாவிலிருந்து பாதுகாத்து கொள்ள கடைபிடிக்கும் மூச்சு பயிற்சி, கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கரோனா என்பது நுரையீரல் உட்பட உங்கள் சுவாசப் பாதையை பாதிக்கும் ஒரு தொற்று என்பது, நம் அனைவரும் அறிந்த ஒன்றாகும். இதனால், நிறைய பேர் சுவாசப் பிரச்சினைகளை அனுபவிக்கிறார்கள், குறிப்பாக இணை நோய் உள்ளவர்கள். கரோனா வைரஸ் உங்கள் நுரையீரலை பல வழிகளில் பாதிக்கலாம். வறட்டு இருமல் மிகவும் பொதுவான கரோனா அறிகுறியாக இருந்தாலும், மூன்றில் ஒரு பங்கு கரோனா நோயாளிகள், இருமும் போது தடிமனான சளியையும், அதனால் நீண்ட நேரம் அடைபட்டிருக்கும் ஒரு நிலையையும் அனுபவிக்கின்றனர்.

Breathing exercise for lungs

எனவே,கரோனா மீட்சியின் போது, நுரையீரல் செயல்பாட்டை மேம்படுத்தும் ஒருவரின் உடற்பயிற்சி வழக்கத்தில் சுவாசப் பயிற்சிகளை கட்டாயம் சேர்த்துக்கொள்ளும்படி நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான நுரையீரல் உள்ளவர்களுடன் ஒப்பிடும்போது வயதானவர்கள் மற்றும் வயதான நுரையீரல் உள்ளவர்கள் மோசமாக பாதிக்கப்படுகின்றனர். எனவே, நமது நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுவாசப் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

அதில் ஒன்று தான் ரூல் ஆஃப் த்ரீஸ் (Rule of threes).இது ஒரு சுவாசப் பயிற்சி ஆகும். இதன் கீழ் நீங்கள் மூன்று முறை ஆழமாக சுவாசிக்க வேண்டும், பின்னர் மூன்று முறை இரும வேண்டும் மற்றும் இதை மூன்று முறை திரும்பத் திரும்ப செய்ய வேண்டும்.

கடைபிடிப்பது எப்படி?

முதலில், நுரையீரல் விரிவாக்கத்திற்கு ஈர்ப்பு விசையை அனுமதிக்க இந்த பயிற்சியை செய்யும் போது எழுந்து நிற்கவும். உங்கள் மூக்கு வழியாக ஒரு ஆழமான மூச்சை எடுத்து 5 - 10 விநாடிகள் தக்க வையுங்கள்.

பின்னர் உதடுகளை சுருக்கி வாய் வழியாக சுவாசிக்கவும். இதையே மூன்று முறை செய்யவும். மூன்றாவது முறை மூச்சை வெளிவிடும்போது, ​​மூன்று முறை வலிமையாக இரும வேண்டும். இந்த மொத்த மூச்சு பயிற்சியையும் மூன்று முறை செய்யவும்.

உங்கள் மூக்கின் வழியாக ஆழமாகவும் மெதுவாகவும் சுவாசிப்பதன் விளைவாக கீழ் விலா எலும்புக் கூண்டு விரிவடையும், இது வயிற்றை முன்னோக்கி நகர்த்தவும் அனுமதிக்கிறது. மேலும் இந்த பயிற்சி நுரையீரல் திறனை அதிகரிக்கவும், ஆக்ஸிஜன் அளவை மேம்படுத்தவும் வழிவகுக்கும் என்று மருத்துவ நிபுணர்கள் சொல்கின்றனர்.

Breathing exercise for lungs

மேலும், நுரையீரலில் ஆழமாக ஆக்சிஜனை பெறுவதன் மூலமாகவும், சளி மற்றும் பிற திரவங்களை வெளியேற்றுவதன் மூலமும், இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனைக் கொண்டு வருவதன் மூலமாகவும் நம்மால் நுரையீரலின் திறனை அதிகரிக்க முடியும். இது கரோனா மற்றும் பிந்தைய கரோனா சிக்கல்களுக்கு தீர்வாக மாறுகின்றனர் என்று குறிப்பிடுகின்றனர்.எனவே, மேற்கூறிய வழிமுறைகளை பின்பற்றி உங்கள் நுரையீரலை பாதுகாப்பது அவசியம்.

Follow Us:
Download App:
  • android
  • ios