இங்கிலாந்தில் புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையொட்டி நாடு முழுவதும் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்துள்ளார்.

இங்கிலாந்தில் கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வரும் சூழலில் வீரியம் மிக்க புதிய வகை கொரோனா வைரசும் வேகமாக பரவி வருகிறது. இதனால், அங்கு பாதிப்பும் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதன்காரணமாக பாதிப்புகள் அதிகமுள்ள பகுதிகளில் கடுமையான ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.எனினும் புதிய வகை கொரோனா வைரஸ் கட்டுடங்காமல் பரவியதால், இங்கிலாந்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து, இங்கிலாந்து முழுவதும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் அறிவித்தார். இந்த தேசிய அளவிலான ஊரடங்கு ஆறு வாரங்களுக்கு நீடிக்கும் எனக் கூறப்படுகிறது. நள்ளிரவு முதல் அமலான ஊரடங்கால் பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடைபெறும் என்ற போரிஸ் ஜான்சன், மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.