bombay college student did suicide in facebook live

மன அழுத்தம் காரணமாக பேஸ்புக் லைவ் செய்துக் கொண்டே 3 ஆம் ஆண்டு படிக்கும் மாணவன் தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

மும்பையில் உள்ள , நர்சீ மோந்ஜி வர்த்தக மற்றும் பொருளியல் கல்லூரியில் படித்து வந்தவர் அர்ஜுன் பரத்வாஜ் இவர் மூன்றாம் ஆண்டு பி.காம் பயின்று வந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது .

23 வயதான அர்ஜுன் மும்பையில் உள்ள தாஜ் லேன்ட் என்ட்ஸ் எனும் ஹோட்டலின் 19-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார் . இந்த பதிவை பேஸ்புக் வலைத்தளத்திலும் முகநூலிலும் பதிவு செய்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் அர்ஜுன்.

இது போன்ற தற்கொலைகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதுவும் பேஸ்புக் லைவ் செய்துக் கொண்டே பல குற்றச்செயல்களில் ஈடுபடுவதும், தற்கொலை செய்துக் கொள்வதும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நபர் தற்கொலை செய்துக் கொள்வதற்கு முன்பாக, சிகரெட் பிடிப்பதும், மது அருந்துவதையும் கூட பேஸ்புக்கில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இந்த விவகாரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது .