வீட்டு ஜன்னலில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டி குழந்தை கடத்தல்...பீதியில் மக்கள்..!

கன்னியாகுமரி மாவட்டத்தில் வட மாநிலத்தவர்கள் அதிக அளவில் தங்கி  உள்ளதாகவும்,அவர்கள் அங்கு உள்ள வீடுகளில் நோட்டம் கண்டு,திருட்டு தொழிலில் ஈடுபடுவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த மூன்று வாரங்களாக,கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் உள்ள வீட்டு சுவரு மற்றும் ஜன்னலில் கருப்பு நிற ஸ்டிக்கர் ஒட்டப்பட்டு உள்ளது என்ற தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது எந்தெந்த வீட்டில் குழந்தைகள் உள்ளனர் என்பதை குறிக்கும் விதமாக கருப்பு நிற ஸ்டிக்கரை ஒட்டி,திருட்டு கும்பலுக்கு அடையாளம் காண வழிவகை செய்யப் படுகிறது.

இதற்கிடையில்,குழந்தை கடத்தலில் ஈடுபட்டு வந்த வட மாநில பெண்ணை ஊர்மக்கள்  பிடித்து உதைத்து பொலிசாரிடம் ஒப்படைத்து  உள்ளனர்.

இதன் காரணமாக மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் நிலவுகிறது.மேலும் சமீப  காலமாக ஒரு சில வீட்டில் உள்ள குழந்தைகள் காணாமல் போனதாகவும் தெரிகிறது.

இது குறித்து ஆய்வாளர்கள் சோதனை செய்து வருகின்றனர்.எனவே பொதுமக்கள் யாரும் தெரியாதவர்கள் யாரவது வீட்டிற்கு வந்தால்,அவர்களை உள்விடாமல்,எந்த  விவரத்தையும் தெரிவிக்காமல் அப்படியே அனுப்பி விடுவது நல்லது.

அதனையும் மீறி  யாரை பற்றியாவது சந்தேகம் ஏற்பட்டால்,காவல் நிலையத்தில்  புகார் கொடுப்பது நல்லது.