ஆட்டுக்கறி இல்ல.. நாய் கறி சாப்பிட்டா தான் குழந்தை அழகா பிறக்கும்.. சீனாவுல இப்படி ஒரு மூடநம்பிக்கையா? 

Pregnancy Myths In China : குழந்தை அழகாக பிறக்க சீன மக்கள் பின்பற்றும் வினோதமான சீன நம்பிக்கைகளை இங்கு காணலாம். 

Bizarre Chinese Beliefs during pregnancy in tamil mks

குழந்தை பெற்றெடுக்க கருவுற்ற பெண் தன்னை ஆரோக்கியமாக பராமரிப்பது அவசியம். இதற்கென மருத்துவர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள், குடும்பத்தினர் உள்பட அனைவரும் அறிவுரைகளை வழங்குவார்கள். அந்த சமயம் கருவுற்ற பெண்ணின் உணவு பழக்கம் முற்றிலுமாக மாறுபடுகிறது. கருவை சுமக்கும் ஒன்பது மாதங்களும் குழந்தையை ஆரோக்கியமாக பெற்றெடுக்க ஒவ்வொரு பெண்ணும் மெனக்கிடுகிறார்கள்.  குழந்தை ஆரோக்கியமாக இருப்பதோடு மட்டுமின்றி சுகப்பிரசவமாகவும் பிறக்க பல்வேறு முயற்சிகளை செய்கின்றனர். 

இது ஒரு பக்கம் இருக்க சீன நாட்டில் சில வினோதமான நம்பிக்கைகள் பின்பற்றப்படுகின்றன.  கருவுற்ற பெண் அந்த நம்பிக்கைகளை ஆரோக்கியமாக குழந்தையை பெற்றெடுக்க பின்பற்றுவதாக சொல்லப்படுகிறது. இந்திய பெண்களைப் பொறுத்தவரை கருவுற்றிருக்கும் போது குழந்தை அழகாகவும், ஆரோக்கியமாகவும் பிறப்பதற்காக குங்குமப்பூ தொடங்கி பாதாம், பிஸ்தா, ஆரஞ்சு போன்ற பழங்கள் உள்ளிட்டவை எடுத்து கொள்வார்கள். இவை சருமத்தை மேம்படுத்தும்  வைட்டமின் ஈ மற்றும் சி நிறைந்தது. ஆனால் சீனாவில் பண்டைய இலக்கியமான தைசான் ஷு (Taichan Shu) சில வினோதமான தகவல்களை கொடுக்கிறது. 

இதையும் படிங்க:  கர்ப்பிணிப் பெண்கள் பற்றி சொல்லப்படும் கட்டுக்கதைகள் உண்மையா?

இந்தப் புத்தகத்தின்படி, கருவானது 2 முதல் 3 மாதங்களில் தண்ணீரை மட்டுமே பெறுகிறது. இந்த நேரத்தில் கர்ப்பிணிகள்  கோதுமை, அரிசி, விலாங்கு போன்றவை சாப்பிட வேண்டும். இவை கருவுக்கு தேவையான சத்துக்களை வழங்குவதோடு கண்களுக்கும் ஆரோக்கியம் தரும் உணவாகும். இது கூட பரவாயில்லை.. ஆனால் அழகான குழந்தை பிறக்க வேண்டும் என்றால் நாயை சமைத்து சாப்பிட வேண்டும் என சீனாவில் ஒரு மூடநம்பிக்கை பின்பற்றப்படுகிறதாம்.  

கருவுற்ற பெண் தனக்கு அழகான குழந்தை பிறக்க வேண்டும் என ஆசைப்பட்டால் வெள்ளை நாயின் மண்டை  ஓட்டை சமைத்து சாப்பிட வேண்டுமாம். குழந்தை வளர்ச்சிக்கு இது உதவுவதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக ஆட்டுக்குட்டியின் இறைச்சியை சாப்பிடக் கூடாதாம். இது பிறக்கும் குழந்தைக்கு வலிப்பு நோயை ஏற்படுத்தும் என சொல்லப்படுகிறது. ஆகவே அதை தவிர்க்க வேண்டும் என சீன நம்பிக்கைகள் வலியுறுத்துகின்றன. 

இதையும் படிங்க:  கர்ப்பிணியின் முகம் பிரகாசமாக இருந்தால் கட்டாயம் பெண் குழந்தை தான் பிறக்குமா? உண்மை பின்னணி என்ன?

சீனாவில் பரவலாக இருக்கும் மற்றொரு கட்டுக்கதை என்னவென்றால் கர்ப்பிணிகள், இரவு சாப்பிடும்போது ஒரு சின்ன கிண்ணத்தில் அரிசி உணவை சாப்பிட வேண்டுமாம். சிறிய கிண்ணத்தில் உண்பதால் சிறிய தலையுடன் குழந்தையை பிறக்குமாம். சாப்பிடும் கிண்ணத்தின் அளவு எப்படி குழந்தையின் தலையின் அளவை தீர்மானிக்கும். வேடிக்கையாக உள்ளதல்லவா? நம் நாட்டில் மட்டம் சாப்பிடும் எத்தனையோ பெண்கள் ஆரோக்கியமான குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள். 

கர்ப்பிணிகள் தலைக்கு மேல் கைகளை உயர்த்தினால்  தொப்புள் கொடியானது குழந்தையின் கழுத்தில்  சுற்றிக்கொள்ளும் என நம்பப்படுகிறது. அதனால் கர்ப்பிணிகள் தலைக்கு மேல் கையை தூக்கக் கூடாது என சொல்லப்படுகிறது. கர்ப்பிணிகளை சுட்டிக்காட்டக் கூடாதாம். இது துரதிர்ஷ்டத்தைத் தரும் என அந்நாட்டில் நம்பப்படுகிறது. கருவுற்ற பெண் அதிக பயணம் மேற்கொண்டால் குழந்தையின் ஆன்மா வெளியேறும் என நம்பப்படுவதால் கர்ப்பிணிகள் பயணம் செய்யக் கூடாதாம்.

சீனாவில் பழங்காலங்களில் பிரசவம் பார்க்கச் செல்லும் மருத்துவச்சிகள் கர்ப்பிணிகளுக்கு உதவ வரும்போது கத்தியைத் தொடும் முன், ​​​ சமையலறைக்குச் செல்வார்களாம். அங்கு சென்று கத்தியைத் தொடுவது, பிரசவம் பார்க்க வந்த அந்தப் பெண்ணுக்குள் உள்ள மோசமான ஆசைகளையும், எதிர்மறை ஆற்றல்களையும் அழிக்கும் என நம்பப்பட்டுள்ளது. இதெல்லாம் சீனாவில் பழங்காலங்களில் நடைமுறையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இப்போது காலம் மாறினாலும், மூட நம்பிக்கைகளை நம்புபவர்கள் எல்லா காலங்களிலும் வாழத்தான் செய்கிறார்கள்.

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios