ஆண்களுக்கு பாலியல் ரீதியாக பல்வேற் சந்தேகங்கள் ஏற்படுவது உண்டு. சில சந்தேகங்களும் அதற்கான பதில்களும் இங்கே.

ஆண்களுக்கு விந்து பெண்களுக்கும் ஏதாவது வெளிப்படுவது உண்டா?

பதில் - பெண்களுக்கு செக்ஸ் எண்ணம் உண்டாகும் போது அல்லது செக்ஸ் கொள்ளும் போது பெண்ணுறுப்பில் ஒரு வழவழப்பான திரவம் யோனியில் சுரக்கும்.

உடலுறவின் போது ஆணின் விந்து அணுக்களை பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவம் உள்ளே செல்ல விடாமல் தடுத்தால் பெண் கர்ப்பமாக முடியாதே?

பதில் - உடலுறவின் போது பெண்ணுக்கு சுரக்கும் திரவமும் ஆணின் விந்து அணுவும் ஒரே சமயத்தில் வெளிப்பட்டாலும் இல்லையெனினும் பெண் கர்ப்பம் அடைய வாய்ப்புள்ளது. 

மாதவிலக்கின் போதுபெண்ணுறுப்பில் சுரக்கும் திரவமும், உடலுறவு கொள்ளும் போது சுரக்கும் திரவமும் ஒன்றா?

பதில் : இல்லை. தீட்டு நேரத்தில் கர்ப்ப பையிலிருந்து குறிப்பிட்ட நாட்களில், சினையடையாத கருமுட்டை இரத்ததுடன் கலந்து பெண்ணுறுப்பு மூலமாக சிறுநீர் தாரை போல் வெளிவரும். உடலுறவின்போது பெண்ணுறுப்பில் சுரக்கும் திரவத்துக்கும் மாதவிலக்கின் போது சுரக்கும் திரவத்துக்கும் வித்தியாசம் உண்டு


ஆண்களுக்கு விந்து அணுக்களுக்கு முன் வெளிப்படும் வழவழ திரவம்கூட பெண்களுக்கு கருவுண்டாக்குமா?

பதில் : விந்துவுக்கு முந்தைய வழவழ திரவம் கருவை உருவாக்காது. ஆனால் கரப்பழக்கம் மற்றும் கடைசியாக உறவுகொண்ட போது சுரந்த விந்தணு கலந்திருக்க வாய்ப்பு உள்ளது. 

ஆணுறை பயன்படுத்தினால் , பெண்கள் கருத்தடை மாத்திரைகளை பயன்படுத்த வேண்டாமா?

பதில் : ஆணுறையை முறையாக பயன்படுத்த வேண்டும். உறவின்போது இடையில் ஆணுறை கிழிந்துவிட்டால் உடனடியாக வெளியே எடுத்துவிட வேண்டும்.

உடலுறவு கொண்டவுடன், உடனடியாக சாப்பிடும் கருத்தடை மாத்திரைக்கும், பல நாட்கள் தொடர்ந்து சாப்பிடும் கருத்தடை மாத்திரைக்கும் என்ன வித்தியாசம்?

பதில் : மாத்திரைகள் எந்த அளவுக்கு வேலை செய்யும் என்பது அந்தந்தந்த மாத்திரையின் திறனை பொறுத்தது. இந்த மாத்திரைகள் கருவுறுவதைத் தடுத்தாலும், உடலுறவு மூலம் பரவும் எய்ட்ஸ்/ மற்றும் சில பால்வினை நோய்களை தடுப்பதில்லை. 

மாதவிலக்கு நேரத்தில் பெண்களுடன் உடலுறவு கொள்ளலாமா? பாதுகாப்பான உடலுறவு அந்த நேரத்திலும் அவசியமா?

பதில்: இந்த நேரத்தில் உறவு கொண்டால் கருத்தரிக்க வாய்ப்பே இல்லை. மேலும் பெண்களுக்கு ஏற்படும் வலியையும் அசௌகரித்தையும் கருத்தில் கொண்டு தவிர்த்து விடுவர். பால்வினை நோய்களை தவிர்க்க ஆணுறை உபயோகப்படுத்துவது நல்லது. 

சுன்னத் செய்த மற்றும் சாதாரண ஆணுறுப்புகளில் உடலுறவின் போது ஏற்படும் வித்தியாசம் என்ன

பதில் : சாதாரணமாக இருக்கும் ஆணுறுப்பின் தோலின் முடிவில் அதிக உணர்ச்சி அளிக்கும் நரம்புகள் இருப்பதால் சுகம் அதிகம் என்று சில ஆய்வுகள் சொல்கின்றன. தகாத வேறு சில முறைகளில் உடலுறவு கொள்வதால் எய்ட்ஸ் போன்ற பாலியல் நோய்கள் உண்டாக வாய்ப்புகள் இருக்கிறதா?

பதில் : ஆணுறுப்பையோ/ பெண்ணுறுப்பையோ வாயால் சுவைப்பதால் எய்ட்ஸ் வாய்ப்பு குறைவு என்றாலும் வேறு பால்வினை நோய்களுக்கு வாய்ப்புகள் அதிகம். பின்புறமாக செக்ஸ் வைத்து கொள்ள மனைவியாகவே இருந்தாலும் ஆணுறை, அணிவது அவசியம். 

முக்கிய டிப்ஸ் எதாவது...?

பதில் : நமது மனம் தான் மிக பலமான செக்ஸ் உறுப்பு. ஆணுறுப்பு சிறியதாக உள்ளது என்பதெல்லாம் ஒன்றுமேயில்லை. மனம் நினைத்தால் உடல் கண்டிப்பாக ஒத்துழைக்கும்.