Asianet News TamilAsianet News Tamil

அப்பாவுக்கு கோயில் கட்டிய பிக்பாஸ் புகழ் சரவணன்! - திறப்பு விழாவில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலங்கள் யார் தெரியுமா?

சரவணன் கட்டிய கோயிலின் திறப்புவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், பிக்பாஸ் பிரபலங்களான நடன இயக்குநர் சாண்டி, தர்ஷன் மற்றும் நடிகைகள் ரித்விகா, மீராமிதுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுடன் சரவணன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

biggboss saravanan built a statue for his father and other biggboss fame all gathered in his hometown
Author
Chennai, First Published Oct 30, 2019, 7:48 PM IST

அப்பாவுக்கு கோயில் கட்டிய பிக்பாஸ் புகழ் சரவணன்! - திறப்பு விழாவில் பங்கேற்ற பிக்பாஸ் பிரபலங்கள் யார் தெரியுமா?

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவந்த "பிக்பாஸ்-3" நிகழ்ச்சியில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒருவர் நடிகர் சரவணன். தனது ஒளிவுமறைவில்லாத நேர்மையான குணத்தால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த அவர், நடன இயக்குநர் சாண்டி, நடிகர் கவின் ஆகியோருடன் இணைந்து செய்த அட்ராசிட்டி பிக்பாஸ் வீட்டையே கலகலப்பாக்கியது.

biggboss saravanan built a statue for his father and other biggboss fame all gathered in his hometown

இந்நிகழ்ச்சியின் போது அரங்கேறிய பல சர்ச்சைக்குரிய நிகழ்வுகள் அனைவராலும் பரபரப்பாக பேசப்பட்டன. அவற்றில், ஒன்று சரவணனின் வெளியேற்றம். சக போட்டியாளர்களுக்கு கூட தெரியாமல், அவரை பிக்பாஸ் வீட்டைவிட்டு வெளியேற்றியது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. சரவணனுக்கே எதற்காக நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டோம் என்பது தெரியவில்லை. இதுஒருபுறம் இருக்க, தனது அப்பாவின் நினைவாக சொந்த ஊரில் அவருக்கு கோயில் கட்டிவந்தார் சரவணன். அதில், அப்பாவின் திருவுருவச் சிலையை நிறுவியிருந்தார். 

biggboss saravanan built a statue for his father and other biggboss fame all gathered in his hometown

இந்த கோயிலின் கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்தன. இதனையடுத்து, சரவணன் கட்டிய கோயிலின் திறப்புவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. இதில், பிக்பாஸ் பிரபலங்களான நடன இயக்குநர் சாண்டி, தர்ஷன் மற்றும் நடிகைகள் ரித்விகா, மீராமிதுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது, அவர்களுடன் சரவணன் எடுத்துக் கொண்ட ஃபோட்டோ, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

Follow Us:
Download App:
  • android
  • ios