விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து சென்ற வாரம் வெளியேறிய அபிராமி தன்னுடைய ஆதரவாளர்களுக்கு ஒரு ஸ்பெஷல் வீடியோ பதிவிட்டு நன்றி தெரிவித்து உள்ளார்.

அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் வெளியான படம் "நேர்கொண்டபார்வை". இந்த படத்தில் மிக முக்கிய வேடத்தில் நடித்துள்ள அபிராமிக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து உள்ளது. ஆனால் படம் வெளியான தேதி அன்று அபிராமி பிக்பாஸ் வீட்டிற்குள் போட்டியாளராக இருந்தார்.

இந்த நிலையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய அபிராமி முதல் வேலையாக அவர் நடித்து வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைந்து, அவருடைய சந்தோஷத்தை ரசிகர்களுடன்பகிர்ந்து உள்ளார். 

பின்னர், ரசிகர்களுக்காக ஒரு வீடியோ பதிவை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் இதனால் வரை ஆதரவு தெரிவித்து வந்த ரசிகர்களுக்கு மிகவும் நன்றி என தெரிவித்துள்ளார்.