10 நாட்களில் ‘பீம் செயலி “ ஒரு கோடிக்கு மேல் பதிவிறக்கம் ....!

கருப்பு பணம் ஒழிக்கும் நடவடிக்கையாக  5௦௦  மற்றும்  1௦௦௦  ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பின்பு,  மொபைல்  போன்  மூலமாக , எளிதான முறையில் பண  பரிவர்த்தனை செய்வதற்கு  ஏதுவாக சென்ற மாதம்  `பாரத் இண்டர் பேஸ் பார் மணி (பீம்) செயலியை பிரதமர்  நரேந்திர மோடி அறிமுகம்   செய்தார்.

இந்த புது செயலியை அறிமுகம் செய்த, 10 நாட்களிலேயே, 1 கோடி முறை பதிவிறக்கம்  செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த  செயலி  மூலம்,  விவசாயிகள்  மற்றும் சிறு  வர்த்தகர்கள்  அனைவரும்  சுலபமான  முறையில், இந்த செயலியை  பயன்படுத்திக்கொள்ள முடியும்.

எவ்வாறு  பதிவிறக்கம்  செய்து பயன்படுத்துவது?

கூகிள் ப்ளே ஸ்டோரில்  இருந்து  பதிவிறக்கம்  செய்து,  நம்  வங்கி கணக்கு விவரங்களை  தெரிவிக்கக வேண்டும்,

பின்னர், யுபிஐ பின் நம்பரை ( unified payment  interface ) பதிவு செய்யவும்.

ஒரு முறை  பதிவு செய்தாலே  போதுமானது, அடுத்த  முறை  பரிவர்த்தனை  செய்வது சுலபம். இந்த  செயலியில்  இந்தி மற்றும் ஆங்கிலம் இரண்டு மொழிகள் உள்ளன. இதன் மூலம்  எந்த  மொழி  வேண்டுமானாலும்  மக்கள்  தேர்வு செய்து பயன்படுத்திக்கொள்ளலாம் என்பது  குறிபிடத்தக்கது