'அரபிக் குத்து' க்கு பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்களின் துள்ளல் ஆட்டம் ...வெண்பா வேற லெவல்...! வைரல் வீடியோ !
Arabic Kuthu: விஜய் நடிப்பில், காதலர் தினத்தன்று வெளியான ''அரபிக் குத்து'' பாடல் வரிகளுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் வெண்பா, வினுஷா குக் வித் கோமாளி ரித்விகா மற்றும் தமிழிலும் சரஸ்வதியும் பிரபலம் தமிழ் உள்ளிட்டோர் நடனம் ஆடும், வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
விஜய் நடிப்பில், காதலர் தினத்தன்று வெளியான ''அரபிக் குத்து'' பாடல் வரிகளுக்கு பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் வெண்பா, வினுஷா குக் வித் கோமாளி ரித்விகா மற்றும் தமிழிலும் சரஸ்வதியும் பிரபலம் தமிழ் உள்ளிட்டோர் நடனம் ஆடும், வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.
நெல்சன் இயக்கத்தில் விஜய், பூஜா ஹெக்டே, செல்வராகவன், கிங்ஸ்லி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி வரும் ‘பீஸ்ட்'. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் அனிருத் (Anirudh) இசையமைக்கிறார்.
மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவில் உருவாகும் இந்த படம்அதிரடி ஆக்ஷன் கதையம்சம் கொண்ட படமாக உருவாகி உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வருகிற ஏப்ரல் 14-ம் தேதி தமிழ் புத்தாண்டை ஒட்டி இப்படத்தை வெளியிட உள்ளதாக படக்குழு அண்மையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
பீஸ்ட் படத்தின் முதல் பாடலான ‘அரபிக் குத்து’ (Arabic kuthu) என்கிற பாடலின் புரோமோ கடந்த வாரம் வித்தியாசமான முறையில் அனிருத், சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குநர் நெல்சன் மூவரின் கூட்டணியில் வெளியாகி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியது. அந்த எதிர்பார்ப்பை பூர்த்து செய்யும் விதமாக பிப்ரவரி 14 காதலர் தின ஸ்பெஷலாக இப்பாடல் வெளியிடப்பட்டது.
சிவகார்த்திகேயனின் பாடல் வரிகளில், அனிருத் மற்றும் ஜோனிடா காந்தி இணைந்து பாடிய இப்பாடல் வெளியானது முதலே சமூக வலைதளங்களை ஆக்கிரமித்தது. இவர்கள் கூட்டணியில் இதற்கு முன் வெளியான செல்லம்மா பாடல் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில், அரபிக் குத்து பாடலும் அமோக வரவேற்பை பெற்றது என்பதும்.
நெல்சன் தயாரிப்பில் உருவான முதல் திரைப்படமான கோலமாவு கோகிலா மற்றும் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்ட்டர் திரைப்படங்கள் வெற்றியடைந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது. இப்பாடலின் மிகப்பெரிய பிளஸ் என்றால் அது விஜய்யின் (Vijay) மெர்சலான நடனம் தான். ஸ்டைலிஷ் லுக்கில் அவர் போடும் துள்ளல் நடனத்தை ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்க்க, பாடலும் வைரல் ஆனது.
''அரபிக் குத்து'' பாடல் வெளியான ஐந்து நாட்களில் 60 மில்லியன்களுக்கும் அதிகமான பார்வையாளர்களை கொண்டு சாதனை படைத்தது. யூடியூப் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த பாடலுக்கு 60 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகள் கிடைத்திருக்கிறது. இதனை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
இது ஒரு புறம் இருக்க, சமூக வலைதளங்களில் கடந்த சில தினங்களாகவே வைரலாகும் பாடல்களுக்கு, பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் டிக்டாக், இன்ஸ்டாகிராம் பிரபலங்கள் நடனமாடுவது ட்ரெண்ட் ஆகி வருகிறது. இது போன்ற வீடியோக்கள் ஏராளமானவை சமூக வலைத்தளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றன.
அந்த வரிசையில் தற்போது, விஜய் டிவி பிரபலங்கள் இணைந்துள்ளன.' 'அரபிக் குத்து'' பாடலுக்கு, பாரதி கண்ணம்மா சீரியல் பிரபலங்கள் வெண்பா, வினுஷா, குக் வித் கோமாளி ரித்விகா மற்றும் தமிழிலும் சரஸ்வதியும் பிரபலம் தமிழ் உள்ளிட்டோர் உள்ளிட்டோர் குத்தாட்டம் போட்டுள்ளனர். அதில், வெண்பாவிற்கு சில மாதங்களுக்கு முன்பு, குழந்தை பிறந்தது. மேலும், கண்ணம்மா கதாபாத்திரத்தில் ரோஷினி விளக்கியதை அடுத்து புது கண்ணம்மாவாக வினுஷா நடிக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனை குக் வித் கோமாளி புகழ் ரித்விகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.தற்போது, அந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.