டெங்கு காய்ச்சலை குணப்படுத்த நிலவேம்பு கசாயம் பெரிதளவில் பயனுள்ளதாக உள்ளது என அனைவரும் அறிவர். அதனால் தான் அரசு மருத்துவமனைகளிலும் டெங்குவால் பாதித்தவர்களுக்கு நிலவேம்பு கசாயத்தை அளிக்கின்றனர். 

ஆண்டுதோறும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல், பன்றிக்காய்ச்சல் உள்ளிட்ட உள்ளிட்டவற்றால் பெருமளவு மக்கள் பாதிக்கப்படுகின்றார்கள். பலர் உயிரிழக்க நேரிடுகிறது. டெங்கு காய்ச்சலுக்கு என்னதான் மருத்துவமனைகளில் சிகிச்சை அளித்து வந்தாலும் அதைவிட மிக சிறந்த நிவாரணியாக நிலவேம்பு கசாயம் பயனுள்ளதாக உள்ளது என தமிழக அரசு, மருத்துவமனைகளில் இலவசமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கி வருகின்றது.

நிலவேம்பு பொடி என்பது, நிலவேம்பு கசாயத்தை எப்படி தயார் செய்ய வேண்டும்? எவ்வளவு நாம் அருந்த வேண்டும்? என்பதை இங்கு விரிவாக பார்க்கலாம். 

நிலவேம்பு பொடி என்பது,  வெட்டிவேர், விலாமிச்சை, சந்தனம், பேய்புடல், கோரைக்கிழங்கு.. இவை எல்லாமே உயர்ந்தவைதான். இந்த பொடியை 5 கிராம் முதல் 10 கிராம் வரை எடுத்துக் கொண்டு 200ml தண்ணீரில் போட்டு நன்கு கொதிக்கவைக்க வேண்டும். அவ்வாறு கொதித்து கொதித்து 50ml சுண்டிய கஷாயமாக நமக்கு கிடைக்கும். இந்த 50 ml அளவு கஷாயத்தை ஒரு வேளைக்கு எடுத்துக்கொள்ளலாம். 

டெங்குவால் பாதிக்கப்பட்ட நபர் மூன்று வேளையும் காலை மதியம் இரவு என மூன்று வேளையும் எடுத்துக்கொள்வது நல்லது. அதே நேரத்தில் இதை தயார் செய்த அடுத்த 3 மணி நேரத்திலேயே அருந்த வேண்டும். அதற்கு மேல் அருந்தினால் எந்த பயனும் இருக்காது.

இதேபோன்று சாப்பிடுவதற்கு 20 நிமிடத்திற்கு முன்பாக நிலவேம்பு கசாயத்தை குடிக்க வேண்டும். ஒரு வயது குழந்தைக்கு இந்த கஷாயத்தை கொடுக்க கூடாது.

1 வயதிலிருந்து 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு 5 முதல் 10 ml வரை நிலவேம்பு கசாயத்தை கொடுக்கலாம். காய்ச்சல் நின்ற பிறகும் இந்த கசாயத்தை கொடுத்தால் தவறு ஒன்றும் கிடையாது. டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிலவேம்பு கசாயத்தை கொடுக்கும்போது அவர்களுக்கு ரத்தத்தில் உள்ள தட்டணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, உடன் காய்ச்சல் மிக விரைவாக குறைந்துவிடும்.

டெங்கு வைரஸை அளிக்கக்கூடிய  வல்லமை வாய்ந்தது இந்த நிலவேம்பு கசாயம். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்யும். சர்க்கரை நோய் உள்ளவர்கள் கூட நிலவேம்பு கசாயத்தை வாரத்திற்கு மூன்று முறை அல்லது தினமும் காலை சிறிதளவு அருந்தி வந்தால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நிலவேம்பு கசாயத்தை தயார்படுத்தும் போது நாம் கவனிக்க வேண்டியது என்னவென்றால் நிலவேம்பு பொடியை சுடுதண்ணீரில் கலந்து. ஒரு சிலர் குடிப்பார்கள். ஆனால் அதனால் எந்த பயனும் ஏற்படாது. இது தவறான ஒன்று. சுடு தண்ணீரில் இந்த பொடியை கலந்து குடிப்பதற்கு பதிலாக சாதாரண தண்ணீரில் சிறிதளவு நிலவேம்பு பொடியை போட்டு சூடு செய்து அதனை சுண்ட வைத்து மூன்று மணி நேரத்தில் குடிக்க வேண்டும்.