Asianet News TamilAsianet News Tamil

இந்த 5 ஜூஸ் மட்டும் நோட் பண்ணி வச்சுக்கோங்க..! தாம்பத்ய வாழ்க்கைக்கு இது மட்டும் போதுமாம்...!

கணவன் மனைவி இடையே நல்ல ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது, அவர்களுக்குள் இருக்கும் தாம்பத்ய உறவை கூட சொல்லலாம்.
 

best juice for husband and wife healthy relationship
Author
Chennai, First Published Apr 18, 2019, 5:58 PM IST

கணவன் மனைவி இடையே நல்ல ஒரு புரிதல் இருக்க வேண்டும் என்றால் அதற்கு மிக முக்கியமாக இருக்க வேண்டியது, அவர்களுக்குள் இருக்கும் தாம்பத்ய உறவை கூட சொல்லலாம்.

தாம்பத்ய வாழ்க்கை எந்த பிரச்னையும் இல்லாமல் சென்றால் தான்   இருவருக்குள்ளும் எந்த கருத்து வேறுபாடும் சந்தேகமும் இருக்காது.இதெல்லாம் சரி, ஒரு சில நேரத்தில் ஆண்களுக்கு ஏற்படும் ஆண்மை குறைவு போன்ற பிரச்சனையை எவ்வாறு சமாளிப்பது என தெரியாமல் யோசனையில் இருப்பார்கள்...

இனி அப்படி இருக்க வேண்டாம்.. வாங்க அதற்கான தீர்வு என்னவென்று பார்க்கலாம். கீழே குறிப்பிடப்பட்டுள்ள இந்த ஐந்து வகையான ஜூஸை எடுத்துக்கொண்டாலே போதும். போதுமான எனர்ஜி மட்டுமின்றி தாம்பத்திய வாழ்க்கை சிறக்க பெரும் உதவியாக இருக்கும்

ஆலிவ்வேரா ஜூஸ் 

ஆலிவேரா ஜூஸ் எடுத்துக் கொள்ளும் போது, அது உடலில் செக்ஸ் ஹார்மோன்களை நன்கு சுரக்க  செய்கிறது. இதனால் தாம்பத்யத்தில் ஈடுபடும் போது அதிக நேரம் செலவழிக்க முடியும். அது மட்டுமில்லாமல் உடலின் குளிர்ச்சிக்கும் மிகவும் முக்கியமான ஒரு ஜூஸ் என்பது குறிப்பிடத்தக்கது.

best juice for husband and wife healthy relationship

மாதுளை ஜூஸ்

மாதுளை ஜூஸ் பொதுவாகவே ரத்த ஓட்டத்திற்கு மிகவும் சிறந்தது. ரத்த ஓட்டம் சீராக இருக்கும் போது ஆணுருப்புக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்கும். எனவே இதன் மூலமும் தாம்பத்ய உறவில் திருப்தி இருக்கும். அதுமட்டுமில்லாமல் இதய நோய் வருவது தடுக்கப்படும்

பால் 

முதலிரவில் பொதுவாகவே புதுமண தம்பதிகளை பால் அருந்த சொல்வார்கள். பாலில் பொதுவாகவே அதிக சத்துக்கள் உள்ளது. அது மட்டுமில்லமல் பாலில் இருந்து கிடைக்க கூடிய சத்துக்கள் நம் உடலில் அதிக நேரம் தங்கி தொடர்ந்து எனர்ஜியை கொடுக்கும். தாம்பத்யமும் சிறக்கும் இதன் காரணமாக தான்  முதலிரவில் மணப்பெண்ணுக்கு பால் கொடுத்து அனுப்புவார்கள்.

best juice for husband and wife healthy relationship

வாழைப்பழம் ஷேக்

வாழைப்பழம் மில்க் ஷேக் தினமும் அருந்தி வர உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. மேலும் தாம்தய  உறவின் போது அதிக எனர்ஜியும் ஸ்டாமினாவும் கொடுக்கும் 

best juice for husband and wife healthy relationship

தர்பூசணி ஜூஸ்

தர்பூசனி ஜூஸ் நம் உடலில் நைட்ரிக் ஆக்சைடு உண்டு செய்யும். இந்த நைட்ரிக் ஆக்சைடு நம் உடலில் ரத்த சுழற்சி சீராக அமைய பெரிதும் உதவும். தாம்பத்ய உறவின் போது இந்த ஜூஸ் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். 

மேற்குறிப்பிட்ட பழச்சாறு தாம்பத்ய உறவிற்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும். 

Follow Us:
Download App:
  • android
  • ios