நக சுத்தியா...? ஹாஸ்பிட்டல் போக வேண்டாம்...இத வீட்லயே பண்ணுங்க போதும்...

நக சுத்தி..?

நக சுத்தி என்பது பொதுவாகவே ஒரு சிலருக்கு ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் நகத்தை சுத்தி வலியுடன் கூடிய வீக்கம் ஏற்படும். இது பொதுவாகவே, பூஞ்சை மற்றும் பாக்டீரியாவால் ஏற்படுகிறது.

இதனை சரி செய்ய வீட்டிலேயே பல மாற்று வழிகள் உள்ளது. அதே என்னென்னு என்று பார்க்கலாம்.

கற்றாழை மற்றும் மஞ்சள்

வீட்டில் எளிதில் கிடைக்கக்கூடிய கற்றாழையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து,அதில் சிறிது விளக்கு எண்ணெய் விட்டு சூடேற்றி அதை நகத்தை சுற்றி தடவி வர நக சுத்தி விரைவில் குணமாகும்.

இதே போன்று வெள்ளை வினிகரை நீரில் கலந்து அதில் விரலை குறைந்து 15 நிமிடமாவது வைத்து வர விரைவில் குணமாகும்

இதே போன்று உப்பு நீரில் நக சுத்தி விரலை வைத்தாலும் விரைவில் குணமாகும்...அதுவும் கடல் நீரில் குளிக்கும் போது நக சுத்தி அன்றே சற்று குணமடைந்து வருவதை உணர முடியும்

எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி, அதை நக சுத்தி வந்த விரல் மீது வைத்து வந்தாலும், இதே போன்று வெறும் மஞ்சளை தண்ணீரில் கலந்து, அதனை விரல் மீது தடவி வந்தாலும், நக சுத்தி மிக விரைவில் குணமடைவதை கண்கூடாக பார்க்க முடியும்.