Asianet News TamilAsianet News Tamil

தோல் நிறத்தை பளபளப்பாக மாற்றும் இந்த 4 பழங்கள் பற்றி தெரியுமா..?

எலுமிச்சை பழச் சாற்றினை நீருடன் கலந்து காலை மாலை என இரண்டு வேளை தொடர்ந்து பருகி வர உடல் சூடு தணியும். முகமும் நல்ல பொலிவு பெறும்.

best fruits for healthy shiny skin
Author
Chennai, First Published Dec 31, 2019, 7:17 PM IST

தோல் நிறத்தை பளபளப்பாக மாற்றும் இந்த 4 பழங்கள் பற்றி தெரியுமா..?

பழங்கள் உண்டால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது என்ற ஒரு விஷயம் நம்மில் அனைவருக்குமே தெரிந்த ஒன்று தான். ஆனால் எந்தெந்த பழத்தில் எந்தெந்த ஊட்டத்சத்து உள்ளது என்பது தெரியுமா..? இதனை தெரிந்துக்கொண்டு அதற்கேற்றவாறு பழங்களை தேர்வு செய்து சாப்பிடலாம். 

லெமன் ஜூஸ் 

எலுமிச்சை பழச் சாற்றினை நீருடன் கலந்து காலை மாலை என இரண்டு வேளை தொடர்ந்து பருகி வர உடல் சூடு தணியும். முகமும் நல்ல பொலிவு பெறும். மேலும் வாய் துர்நாற்றம் போக்க எலுமிச்சை சாற்றுடன் சிறிதளவு பன்னீர் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய் துர்நாற்றம் வரவே வராது. மேலும் எலுமிச்சை சாற்றில் விட்டமின் சி உள்ளதால் உடலுக்கு மிகவும் நல்லது.

best fruits for healthy shiny skin

வாழைப்பழம் 

மஞ்சள் வாழை - மலச்சிக்கலைப் போக்கும். செவ்வாழைப்பழம் கல்லீரல் வீக்கத்தை குறைத்து சிறுநீரகம் தொடர்பான அனைத்து வியாதிகளையும் தீர்க்கும். பச்சை வாழைப்பழம் உடலை குளிர்ச்சியடையச் செய்யும். ரஸ்தாளி பழம் கண்நோய்களை குணமாக்கும்.. உடலை உடலுக்கு நல்ல வலிமை தரும். கற்பூர வாழைப்பழம் கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும். நேந்திரம் பழம்- இரும்பு சத்து அதிகமாக உள்ளதால் ரத்த சோகை வராமல் தடுக்கும்.

best fruits for healthy shiny skin

பப்பாளி பழம் 

பப்பாளி பழத்தில் விட்டமின் ஏ அதிகமாக உள்ளதால் இதனை தினமும் சாப்பிட்டு வரலாம். கண்பார்வை நன்றாக இருக்கும். மலச்சிக்கல் இரத்த சோகை போன்றவை வரவே வராது. தேவையற்ற கொழுப்புகளை உடலில் இருந்து அகற்றும்.

best fruits for healthy shiny skin

கொய்யா பழம்:

கொய்யா பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளதால் எலும்பு வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது. நினைவாற்றலை அதிகரிக்கும். அன்னாச்சி பழம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் திறன் கொண்டது. கண்பார்வை குறைபாட்டினை நீக்கும். ரத்த அழுத்தத்தை சீராக்கும். வியர்வை துர்நாற்றத்தை குறைக்கும்.

உணவே மருந்து என்பதற்கு ஏற்ப நல்ல ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களும், பழ  வகைகளும் எடுத்துக்கொள்வது நல்லது. 

Follow Us:
Download App:
  • android
  • ios