சுய இன்பம் காண்பது உடல்நிலையில் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை பற்றி இங்கு விரிவாக பார்க்கலாம்.

பொதுவாகவே சுய இன்பம் காண்பதால் உடலளவில் எந்த ஒரு பெரிய பாதிப்பும் ஏற்படாது. அதே சமயத்தில் சுய இன்பம் காண்பது அளவுக்கு மீறினால் நாளடைவில் அதற்கு அடிமையாகி மற்ற எந்த ஒரு விஷயத்திலும் ஆர்வமில்லாமல் இருப்பார்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சுய இன்பம் காண்பது தவறு என்ற ஒரு கருத்து நிலவி வருகிறது. இதை பற்றி மற்றவர்களிடம் தைரியமாக வெட்கம் இல்லாமல் பேசுவதற்கு, நம் நண்பர்கள் அல்லது வழிகாட்டும் மருத்துவர் யாரையாவது நேரில் சென்று சந்தித்து இதுகுறித்து சந்தேகங்களை கேட்டறிந்து, அதன்படி நடந்துக்கொள்வது மிகவும் சிறந்தது

அளவுக்கு அதிகமாக சென்றால் அமுதமும் நஞ்சு என்பார்கள் அது போன்று தான் சுய இன்பப் பழக்கத்திற்கு அடிமையானால் அது நாளடைவில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆனால் மாதத்திற்கு பத்து முறை என்பது தவறான ஒன்று அல்ல.காரணம் இதன் மூலம் பல நன்மைகள் உண்டு.முதலில் என்னென்ன நன்மைகள் என்பதை பார்க்கலாம்.

உங்களுக்கு உண்டான மன அழுத்தம் குறையும் 

நல்ல உறக்கம் வரும் 

மன  நிலைமையில் நல்ல ஒரு மாற்றம் இருக்கும்

சந்தோஷமாக இருக்கும்

உடம்பு வலி குறையும். உடலுறவு சம்பந்தமான ஆர்வம் அதிகமாக இருக்காது.இவை அனைத்தும் அளவோடு சுய இன்பம் கண்டால் மட்டுமே..!

இதுவே சுய இன்பம் செய்யும் பழக்கத்திற்கு அடிமையானால் உங்களின் தினசரி வேலைகள் பெரிதும் பாதிக்கும். அது கல்லூரிக்கு செல்வதாக இருந்தாலும் சரி வேலைக்கு செல்வதாக இருந்தாலும் சரி. சரி வர உங்களால் செயல்பட முடியாது. ஏதோ ஒரு நாள் நண்பர்களுடனான நிகழ்ச்சியோ அல்லது குடும்ப நிகழ்ச்சி எதிலாவது பங்கு பெற வேண்டும் என நீங்கள் திட்டம் போட்டு இருந்தால் அன்றைய தினம் உங்களுடைய மன நிலைமையில் மாற்றம் வரலாம். இதன் காரணமாக எந்த நிகழ்ச்சிக்கும் நீங்கள் செல்ல முடியாத சூழல் உருவாகும். சமூகத்தின் மீது எந்த அக்கறையும் இல்லாமல் ஒரு விதமான மன நிலைமையில் நீங்கள் இருப்பீர்கள்.

இதுபோன்ற சமயத்தில் கண்டிப்பாக மருத்துவரை அணுகி அதற்கு உண்டான கவுன்சிலிங் எடுத்துக்கொள்வது நல்லது. மேலும் மருத்துவரின் ஆலோசனைப்படி இதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி பார்க்கலாம்.

சுய இன்பம் காண வேண்டும் என்ற எண்ணம் அடிக்கடி வரும் போது அதனை தவிர்க்க வெளியில் ரன்னிங் போகலாம். அல்லது டைரி எடுத்துக்கொண்டு அதில் ஏதாவது எழுதலாம் நண்பர்களை சந்தித்து அவர்களுடன் ஆலோசனை செய்யலாம் அல்லது இயற்கை சூழல் மிக்க ஒரு பகுதியில், நடைப்பயிற்சி செய்வது  நல்லது. இவ்வாறு செய்வதால், தீய பழக்க வழக்கங்களுக்கு அடிமையாக இருந்தாலும் சரி அதிலிருந்து விடுபடலாம். 

சுயஇன்பம் காணும் ஆண்களுக்கு ப்ராஸ்டேட் கேன்சர் வருவது மிகவும் குறைவு என ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது என்பது கூடுதல் தகவல்.