Toe rings: பெண்கள் காலில் மெட்டி அணிவது காமத்தை கட்டுப்படுத்துமா..? அறிவியல் சொல்லும் ரகசியம் ..!

பெண்கள் காலில் மெட்டி அணிவதில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறது,என்பதை தெரிந்து வைத்து கொள்ளுங்கள்.

Benefits of wearing toe ring for married woman

பெண்கள் தங்கள் காலில் மெட்டி அணிவது தங்களுக்கு திருமணம் ஆனதை, உணர்த்துவதற்கு மட்டுமே, என்று பலரும் நினைத்து கொண்டிருக்கின்றனர். ஆனால், பெண்கள் காலில் மெட்டி அணிவதில் அறிவியல் சொல்லும்  காரணம் வேறு. இவற்றுள் பல்வேறு நன்மைகள் நிறைந்துள்ளன. அவை என்னென்ன என்பதை கீழே பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

Benefits of wearing toe ring for married woman

இந்து பாரம்பரியத்தில், திருமணமான ஒவ்வொரு பெண்ணும் கழுத்தில் தாலி அணிவது, கால்களுக்கு மெட்டி அணிவது, கைகளுக்கு கண்ணாடி வளையல் போடுவது மற்றும் நெற்றியில் குங்கும் வைப்பது போன்றவை நம்முடைய முன்னோர்கள் வழி வழியாய் நமக்கு சொல்லி தந்த மரபுகளில் ஒன்றாகும். உண்மையில் இவற்றை அணிவதற்கு அறிவியல் காரணம் இருக்கிறது. 

அறிவியல் காரணம் என்ன தெரியுமா?

பெண்ணுக்கு பெருமையும், மங்கலமும் தரக்கூடிய அணிகலன்களுள் முக்கியமானது மெட்டி. திருமணம் ஆனதும் கால் கட்டை  விரலுக்கு அடுத்த விரலில் பெண்கள் மெட்டி அணிவர், அந்த விரலில் மட்டும் மெட்டி அணிய வேண்டும், என்று பெரியோர்கள் சொல்லி வைத்ததற்கு காரணம் உண்டு. 

கால் கட்டை விரலுக்கு அடுத்த விரலில் தான் கருப்பையின் நரம்பு நுனிகள் வந்து முடிகின்றன. இம்மெட்டி நடக்கும் போது  அழுத்தப்படுவதால் கருப்பை வளர்ச்சிக்கு இந்த அழுத்தம் பெரிதும் உதவுகின்றது. அதனால்தான் திருமணத்தில் பெண்கள் காலில் மெட்டியை அணிகின்றனர். காலில் கீழ்ப்பகுதியில் இதயம் முதல் மூளை நரம்புகள் வரை எல்லாவற்றையும்  கட்டுப்படுத்தும் மிக நுண்ணிய நரம்பு ஸ்தானம் உள்ளன.

Benefits of wearing toe ring for married woman

பெண்களுக்கு காமத்தை கட்டுப்படுத்துமா?

ஆண்களை விட பெண்களிடம் தான் காமம் உணர்வு அதிகம். இதை பல ஆய்வுகள் நிரூபித்துள்ளன. எனவே, பெண்கள் மெட்டி அணிவது,கால் விரல்களில் நரம்புகள் அழுத்தப்பட்டு அவர்களின் காமத்தை கட்டுப்படுத்த  உதவுகின்றனவாம். 

உங்களுக்கு தெரியுமா.. பெண்கள் அணியும் மெட்டி மற்றும் கண்ணாடி வளையல்கள் கர்ப்பிணிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவற்றை அணிவதன் மூலம், நரம்புகளில் மெதுவாக அழுத்தம் ஏற்பட்டு  பெண்களுக்கு சுகப் பிரசவம் நடக்கும்.
பெண்களின் கர்ப்பக் காலத்தில் மயக்கம், வாந்தி, சோர்வு, பசியின்மை ஏற்படுகின்றன. கர்ப்பகாலத்தின் போது இந்தக் கால் விரல் நரம்பினை அழுத்தித் தேய்த்தால் மேற்கண்ட வலிகள் குறையும். 

Benefits of wearing toe ring for married woman

பாசிட்டிவ் எனர்ஜி:

கால்களில் சில்வர் மெட்டி அணிவது பெண்களுக்கு இயற்கையில் இருக்கும் பாசிட்டிவ் எனர்ஜியை அளிக்கிறது. அதனால் தான் இவற்றை அணியச் சொல்கிறார்கள் நம்முடைய முன்னோர்கள்.

மெட்டி தேய்ந்த பிறகு தூக்கி எறியக் கூடாது. அதை அப்படியே கடையில் கொடுத்து உருக்கி வரும் புது வெள்ளியால் தான்  மறுபடியும் மெட்டி செய்ய வேண்டும். எந்த காரணம் கொண்டும் மெட்டியை காலிலிருந்து நீக்கலாகாது என்பர் பெரியோர்கள். அக்காலத்தில் மணமகனுக்கும் மெட்டி உண்டு என்று திருமங்கை ஆழ்வாரின் வரலாற்றிலிருந்து தெரிய வருகிறது. காலமாற்றத்தினால் மெட்டி, பெண்ணுக்குரிய அணிகலனாகியது. 

Latest Videos
Follow Us:
Download App:
  • android
  • ios