Asianet News TamilAsianet News Tamil

ஆஹா .. எண்ணெய் குளியல் குளிக்க 'இதுதான் மேட்டரா'..?

எண்ணெய் குளியல் செய்வதால் என்னென்ன பலன்கள் உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். குளியல் காலை 6.30  மணிக்குள் தொடங்கிவிட வேண்டும்.

benefits of oil bath
Author
Chennai, First Published Jan 25, 2019, 4:44 PM IST

 ஆஹா .. எண்ணெய் குளியல் குளிக்க  'இதுதான் மேட்டரா'..? 

எண்ணெய் குளியல் செய்வதால் என்னென்ன பலன்கள் உள்ளது என்பதை இப்போது பார்க்கலாம். குளியல் காலை 6.30 மணிக்குள் தொடங்கிவிட வேண்டும்.

லேசாக சூடான தண்ணீரில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். அல்லது நலுங்குமாவை பயன்படுத்தலாம். எளிமையான உணவுகள் உண்ண வேண்டும்.கடுமையான வெயிலில் வேலை செய்யவும் கூடாது. குளிர்ந்த உணவுகள் கண்டிப்பாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

எண்ணெய் தேய்த்து குளிப்பதால் நம்மை சுற்றிலும் ஒரு புகை வளையம் உருவாகின்றது என்பதை இந்த ஆய்வின் மூலம்கண்டுபிடித்திருக்கிறார்கள். இவ்வளையம் இருப்பதால் கோள்களில் இருந்து வரும் காந்த அலைகள் உடலுக்குள் நுழைய முடியாமல் போகின்றது. எண்ணெய் குளியல் எடுத்துக்கொண்டால் உடல்சூடு சீராகும், அழகு கூடும் சருமம் மென்மையாகும். ஐம்புலனும் நல்ல பலன் கிடைக்கும். தலைமயிர் நன்கு வளரும். நல்ல குரல்வளம் கிடைக்கும். எலும்புகள் பலப்படும். 

benefits of oil bath

பெண்கள் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டிய நாட்கள் என்ன தெரியுமா?

ஞாயிறு குளித்தால் - வடிவமும் அழகும் போய்விடும்.

திங்கள் குளித்தால் - அதிக பொருள் சேரும்.

செவ்வாய் குளித்தால் - துன்பம் வரும்

புதன் குளித்தால் - புத்தி வந்திடும்

வியாழன் குளித்தால் - உயரறிவு போய்விடும் 

வெள்ளி குளித்தால் - செல்வம் மிகும்.

சனி குளித்தால் - ஆயுள் அதிகமாகும்.

இதேபோன்று ஆண்கள் எண்ணெய் குளியல் எடுக்க வேண்டிய நாட்களை பற்றி பார்க்கலாம்.

திங்கட்கிழமை தேய்த்து குளித்தால் முடக்கு வாதம். செவ்வாய் என்றால் முதுகுதொடர்பான பிரச்னை வரும். வியாழக்கிழமை குளித்தால் கால் குடைச்சல் வரும்
வெள்ளிக் கிழமை குளித்தால் முடக்கு வாதம்

ஆக எண்ணெய் குளியல் போட நினைப்பவர்கள் சனி, புதன் நாட்களில் குளிக்க வேண்டும் அதாவது ஆண்கள் சனி அல்லது புதன் கிழமையில் மட்டும் எண்ணெய் தேய்த்து குளித்தால் ஆகச்சிறந்தது. அதே சமயத்தில் எண்ணெய் தேய்த்து குளிக்கும் போது குளிர்ந்த நீரில் குளிக்கக்கூடாது. வெதுவெதுப்பான சுடுநீரில்தான் குளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us:
Download App:
  • android
  • ios