பீர் பிரியர்களுக்கு இனிமையான செய்தி. பீருக்குப் பின்னாலும் மருத்துவத்தன்மை இருக்கிறதாம் - ஒரு ஆய்வு செல்கிறது. தினமும் 1 கிளாஸ் பீர் குடித்தால் ஆண்கள் படுக்கையில் அதிக செயல்தினுடன் இருக்க முடியுமாம். இதற்கு முன்பு பீரைக் குடிக்கும்போது அதன் நன்மைகள் தெரியாமல் இருந்திருக்கலாம். தற்போது அவற்றை தெரிந்துகொள்வோம். 

பீர் தானியங்கள், ஈஸ்ட், ஹாப்ஸ் போன்ற பொருட்களை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இதில் பொட்டாசியம், வைட்டமின் பி, உள்ளிட்ட ஊட்டசத்துக்கள் உள்ளன. விந்தணு குறைபாடு, மலட்டு தன்மை, விறைப்பு தன்மை, பிறப்புறுப்பு வளர்ச்சியின்மை போன்றவை ஆண்களின் முதன்மையான பிரச்சினையாக கருதப்படுகிறது. பீர் சிவப்பு அணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ஆண்களின் பிறப்புறுப்பில் சீரான ரத்த ஓட்டத்தை ஏற்படுத்துகிறது என்றும், விறைப்பு தன்மையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பீர் சிறந்த மருந்து என்றும் ஆய்வு கூறுகிறது

தினமும் ஆண்கள் 1 பிண்ட பீர் (பீருக்கென்ற பிரத்தியேக கிளாஸ்) குடித்து வந்தால் விறைப்பு தன்மை பிரச்சினை குணமடைந்து தாம்பத்தியத்தில் செயல்திணை அதிகரிக்க முடியுமாம். 34 சதவீதம் வரை ஆண்மை தன்மையை அதிகரிக்கும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். 

பீரில் உள்ள பைட்டோஸ்ட்ரெஜென்கள் ஆர்கஸம் அடைவதை தாமதமாக்கும் என்றும் இதனால் விரைவில் சலிப்பு ஏற்படாமல் பீர் அதிக நேரம் படுக்கையில் செயல்திறனுடன் இருக்க செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பீரில் சேர்க்கப்படும் ஹாப்ஸ் பொருளில் உள்ள  ஜந்தோஹுமால் (Xanthohumol) என்ற மூலக்கூறு ஆண்களுக்கு மட்டும் ஏற்படும் ப்ரோஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் தன்மை கொண்டது என்றும் கூறப்பட்டுள்ளது. 

புற்றுநோய் செல்களை உருவாகாமல் உடலை வலிமையுடன் பாதுக்காக்கும். பீரில் அதிக அளவில் உள்ள வைட்டமின் பி ஹோமோசிஸ்டெய்ன் (homocysteine) என்ற இதய நோயை தடுக்கும் மூல பொருளை உடலுக்கு தருகிறது. ரத்தம் உறைவதை தடுத்து, சீரான ரத்த ஓட்டத்தை கொடுக்கும். 
எனினும் இவ்வளவு நன்மைகளையும் பெற அளவு முக்கியம் என்கின்றனர் ஆய்வாளர்கள் அதிக அளவில் குடிக்க கூடாது. அது ஆபத்தாகி விடும். தினமும் 1 பிண்ட கிளாஸ் பீர் குடித்தாலே போதுமானது.