சென்னையில் ஆட்டுக்கறிக்கு பதிலாக இந்த கறியா..! ஏமார்ந்து உண்ணும் மக்கள்....

சென்னையில் ஆட்டுக்கறிக்குப் பதிலாக,வெளிமாநிலங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட மாட்டு கன்றுக்குட்டிகளின் இறைச்சியை கொண்டு பிரியாணி செய்யப்படும் சம்பவம் அம்பலமானது

சென்னை எழும்பூர் கூவம் நதிக்கரை ஓரமாக கன்றுக்குட்டிகளை வெட்டி,எங்கேயோ  எடுத்து செல்வதாக ரகசிய தகவல் கிடைக்கவே,சம்பவ இடத்திற்கு எழும்பூர் போலீசாருடன் விரைந்த சுகாதரதுரையினர் அதிரடியாக சோதனை  செய்தனர்.

அப்போது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது.அதன்படி,

சுகாதாரத்துறையினர் சென்று ஆய்வு செய்த போது அவை மாட்டிறைச்சி அல்ல, கன்றுக்குட்டிகளின் இறைச்சி என்பது தெரியவந்தது.

பின்னர் விசாரணை முடிவில், வெளிமாநிலங்களில் இருந்து ரயில்கள் மூலம் கன்றுக்குட்டிகளின் இறைச்சியை கொண்டு வருவதாகவும்,அவற்றை ஆட்டிறைச்சி துண்டுகளைப் போலவே வித்தியாசம் தெரியாத அளவுக்கு சிறு சிறு துண்டுகளாக நறுக்கி பல்வேறு பிரியாணி கடைகளுக்கு அனுப்பி வைப்பதும் தெரியவந்துள்ளது.

இதனை தொடர்ந்து உரிமையாளர் உட்பட 9 பேரை பிடித்த அதிகாரிகள்,அவர்களிடம் தவிர விசாரணை செய்தபின்னர்,600 கிலோ எடை கொண்ட எலும்பில்லாத கன்றுக்குட்டிகளின் இறைச்சியை பறிமுதல் செய்து கொடுங்கையூரில் உள்ள கழிவுகள் அகற்றும் இடத்துக்கு கொண்டு சென்று அவற்றை அழித்தனர்.

ஆட்டுக்கறி போன்று ஸ்மெல் வரவைப்பது எப்படி..?

வால்டாக்ஸ் சாலையில், ஆட்டு இறைச்சி இறைச்சியின் வாசனையை போன்றே மனம் கொடுக்கும் எஸ்ஸன்ஸ் விற்கப்படுவதாகவும் அவற்றை மாட்டு கறியுடன் சேர்த்து பிரியாணி செய்தால் மட்டன் பிரியாணியை போன்ற வாசனை கொடுக்கும் என்றும் கூறி உள்ளனர்.

பிடிபட்ட 9 பேர் மீது 268, 269 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த எழும்பூர் போலீசார், பின்னர் அவர்களை ஜாமினில் விடுவித்தனர். இந்தப் புகார் உணவுப் பாதுகாப்பு துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்,விரிவான விசாரணை நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும்,இது போன்ற ரசாயனங்கள் செயற்கையாகசேர்க்கப்படுவதால்,அதனால் உடல் நலன் பாதிக்கும் என சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.