பீலா ராஜேஷ் சொன்ன நல்ல செய்தி! அடுத்தடுத்து ரிசல்ட் இப்படி இருந்தால் கொரோனா கண்ட்ரோல்..! 

தமிழகத்தில் கடந்த 14 நாட்களுக்குப் பிறகு புதிய கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்துள்ளன என சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் இன்று செய்தியாளர்கள் சந்திப்பின் போது தெரிவித்து உள்ளார்.

தினமும் தமிழகத்தில் கொரோனா தொற்று விவரத்தை மாலை நேரத்தில் சுகாதாரத்துறை செயலாளர் அறிவிப்பது வழக்கம். அந்த வகையில் இன்று புதிதாக 31 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்கள் அனைவருமே கண்காணிப்பில் இருந்தவர்கள். இதன் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1204 ஆக அதிகரித்துள்ளது என தெரிவித்தார் .

தொடர்ந்து பேசிய அவர் கொரோனா பாதித்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 81 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 12 ஆக உள்ளது என்றும் குறிப்பிட்டார். குணமடைந்து உள்ளவர்கள் கூட தற்போது மருத்துவமனையில் கண்காணிப்பில் வைத்து உள்ளோம். கொரோனா தடுப்பு நடவடிக்கையில் தமிழகம் முன்னிலையில் தான் உள்ளது. எந்த விதத்திலும் பின்னடைவு இல்லை என்றும் தெரிவித்து உள்ளார் 


60 வயது மேற்பட்டவர்களுக்கு! 

60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருப்பது நல்லது. அத்தனையும் மீறி வெளியில் செல்ல நேரிட்டால், மாஸ்க் அணிவது கட்டாயம். நோய் வாய்பட்டவர்கள் என்றால் மூன்றடுக்கு முகக்கவசம் தான் அணிய வேண்டும் என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் இந்த 21 நாட்கள் ஊரடங்கு நாட்களில், கடந்த 14  நாட்களுக்கு பிறகு புதிய கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது என்றும் கடைசியாக மார்ச் 30 ஆம் தேதி 17 கேஸ்கள் பதிவாகியிருந்தன. அதன் பின்னர் புதிய கேஸ்களின்  எண்ணிக்கை அதிகரித்து வந்ததை சுட்டிக்காட்டி உள்ளார் 


இந்த நிலையில்  இன்று 31 கேஸ்கள் மட்டும் பதிவாகி உள்ளன என்றும் தொடர்ந்து இந்த எண்ணிக்கை குறையும் பட்சத்தில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் இருப்பதை உணர முடியும் என சற்று நம்பிக்கை  தரும் விதத்தில் பேசி உள்ளார் பீலா ராஜேஷ்