Golden Facial : தங்க நிறத்தில் முகம் பளபளக்க சூப்பரான டிப்ஸ்.. உடனே ட்ரை பண்ணுங்க... மிஸ் பண்ணிடாதீங்க!!
இந்த விஷயங்களை பயன்படுத்தி, இனி நீங்களும் வீட்டில் கோல்டன் ஃபேஷியல் மூலம் பளபளப்பான சருமத்தை பெறுங்கள்.
நம் முகம் எப்போதும் பார்ப்பதற்கு பளபளப்பாக இருக்கவும், முகப்பரு பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்க மாதம் ஒரு முறையாவது கண்டிப்பாக ஃபேஷியல் செய்து கொள்ள வேண்டும். அந்த வகையில் சிலர் கோல்டன் பேஷியல் செய்வதற்கு பார்லரை நாடுகின்றனர். நீங்களும் ஒவ்வொரு மாதமும் கோல்டன் ஃபேஷியலுக்கு பணத்தை செலவழித்துக் கொண்டு இருக்கிறீர்களா..? ஆனால், இப்பதிவை படித்த பிறகு இனி உங்கள் பணத்தை சேமிக்கலாம். ஆம், இன்று இக்கட்டுரையில், வீட்டில் இருந்தபடியே கோல்டன் பேஷியல் செய்வது எப்படி என்று பார்க்கலாம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள குறிப்புகளை
நீங்கள் வெறும் 10 நிமிடங்களில் செய்வதன் மூலம் பளபளப்பான மற்றும் குறைபாடுற்ற சருமத்தை பெறுவீர்கள்.
இதையும் படிங்க: உங்கள் முகம் கண்ணாடி போல ஜொலிக்க ஒயின் ஃபேஷியல் ட்ரை பண்ணுங்க..!!
வீட்டில் கோல்டன் ஃபேஷியல் செய்வது எப்படி?
- கோல்டன் பேஷியல் செய்ய முதலில் உங்கள் தலைமுடியை நன்கு சீவி கொண்டை போட்டுக் கொள்ளுங்கள்.
- அதன் பிறகு உங்கள் முகத்தை தண்ணீரில் கழுவி கொள்ளுங்கள் இப்போது பேசியலின் முதல் படி முகத்தை சுத்தப்படுத்துவது, எனவே உங்களிடம் ஏதேனும் கிளிசரின் இருந்தால் அதை பயன்படுத்தவும் அல்லது பச்சை பாலை பயன்படுத்தலாம். பச்சை பால் சிறந்த சுத்தப்படுத்தியாக கருதப்படுவதால், 5 முதல் 7 நிமிடங்கள் வரை பச்சை பாலை முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்யவும்.
- பின்னர் ஒரு டீஸ்பூன் தேன், அரை டீஸ்பூன் சர்க்கரை தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு ஆகியவற்றை நன்கு கலக்கவும். இப்போது உங்கள் முகத்திற்கு இயற்கையான ஸ்க்ரப்பர் தாயார். இந்த ஸ்கரப்பைப் பயன்படுத்தி முகத்தை 5 முதல் 7 நிமிடங்கள் வரை மெதுவாக மசாஜ் செய்யவும். இது முகத்தில் இருக்கும் இருந்து செல்களை நீக்கி சருமத்தை சுத்தமாக மாற்றும்.
இதையும் படிங்க: உங்கள் முகத்திற்கு இயற்கையான பளபளப்பு வேணுமா? அப்ப இந்த டிப்ஸ ட்ரை பண்ணி பாருங்க..
- உங்கள் முகத்தை ஸ்கிரப் செய்த பிறகு, சூடான தண்ணீரில் முகத்தை ஆவி பிடிக்க வேண்டும். ஆவி பிடித்த பிறகு முகத்தில் இருக்கும் துளைகள் திறக்கப்படுகின்றன. எனவே, முகத்தில் ஆவி பிடித்த பிறகு, முகத்தில் மாய்சரைசரைப் பயன்படுத்தாதீர்கள்.
- பிறகு, 2 டீஸ்பூன் தேன் மற்றும் அரை டீஸ்பூன் மஞ்சள் இரண்டையும் நன்றாக கலந்து, அதை முகத்தில் தடவவும். இது உங்கள் முகத்திற்கான இயற்கையான ஃபேஸ் பேக்.. இந்த பேக்கை உங்கள் முகத்தில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை வைத்திருங்கள். அதன் பிறகு உங்கள் முகத்தை கழுவவும்.
- முகத்தை கழுவிய பின், முகத்தில் டோனர் மற்றும் மாய்சரைசரை தடவவும். இந்த வழிமுறைகளின் படி வீட்டில் கோல்டன் பேசியல் சுலபமாக செய்யலாம்.
ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன் Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.
Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D