ஆட்டோ ஓட்டுனரின் மகள் மன்யா சிங், மிஸ் இந்தியா 2020 போட்டியில் 2வது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளார்.

உத்தர பிரதேசத்தை சேர்ந்த ஆட்டோ ஓடுனரின் மகளான மன்யா சிங் மிஸ் இந்தியா 2020ல் கலந்து கொண்டு 2வது இடம் பெற்று சாதனை படைத்துள்ளார். அவருடைய வாழ்க்கை பயணம் குறித்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார். அதில், தன்னுடைய 14 வயதிலே வீட்டை வீட்டு வெளியேறியதாகவும், உணவு மற்றும் தூக்கமின்றி பல இரவுகள் கழித்தாகவும் தெரிவித்திருக்கிறார். புத்தகங்கள், ஆடைகள் வாங்கக்கூட பணம் இல்லை என்றும் வறுமையின் காரணத்தால் பாத்திரங்கள் கழுவியும், கால் சென்டரில் வேலை செய்தும் படிப்பை முடித்ததாக கூறியிருந்தார். பின்னர், அவருடைய படிப்புக்காக பெற்றோர் பட்ட கஷ்டங்களையும் பகிர்ந்திருந்தார்.

மன்யா சிங்கின் விடாமுயற்சியால் மிஸ் இந்தியா போட்டியில் கலந்து கொண்டு 2வது இடத்தை பெற்று, அவருடைய பெற்றோருக்கு பெருமை சேர்த்துள்ளார். இவருடைய இந்த வாழ்க்கை பயணம் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது.