Asianet News TamilAsianet News Tamil

தடுப்பூசி போடாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு.. மீறினால் 1 லட்சத்துக்கு மேல் அபராதம்.. ஷாக்கான அறிவிப்பு..!

கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியாவில் சற்று தணிந்தாலும், உலக நாடுகள் அதன் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

Austria order non-vaccinated people in Covid-19 lockdown
Author
Austria, First Published Nov 16, 2021, 6:13 PM IST

கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக ஆஸ்ட்ரியா அதிபர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசின்  இந்த அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள் வெடித்துள்ளன. 

கொரோனாவின் கோரதாண்டவம் இந்தியாவில் சற்று தணிந்தாலும், உலக நாடுகள் அதன் பிடியில் இருந்து மீள முடியாமல் தவித்து வருகின்றன. குறிப்பாக சீனா, அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஆஸ்ட்ரியா போன்ற நாடுகளில் கொரோனா பரவல் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளன. இதில் பெரும்பாலான நாடுகளில் வேகமாக பரவக்கூடிய டெல்டா வகை கொரோனா வைரஸ் தான் அதிக பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன.

இதையும் படிங்க;- jai bhim: இந்து என்றால் இளக்காரமா.. அந்தோணிசாமி பெயர் குருமூர்த்தியாக மாறியது ஏன்? கொதிக்கும் அர்ஜூன் சம்பத்.!

Austria order non-vaccinated people in Covid-19 lockdown

அந்த வகையில் ஐரோப்பிய கண்டத்தில் அமைந்துள்ள அழகிய நாடான ஆஸ்ட்ரியா, கொரோனாவை கட்டுப்படுத்த அதிரடி நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, அந்நாட்டில் முழுமையாக தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்களுக்கு மட்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்ளாத நபர்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே செல்ல வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அரசின் இந்த உத்தரவை மீறுபவர்களுக்கு 1,450 யூரோ வரை அபராதமாக விதிக்கப்படுமாம். இதன் இந்திய மதிப்பு 1 லட்சத்து 22 ஆயிரத்து 480 ரூபாய். 

இதையும் படிங்க;- Jai Bhim: பாமக ரவுடி கும்பலிடம் இருந்து சூர்யாவை காப்பாற்றுங்கள்.. ஸ்டாலின் அரசை நெருக்கும் விசிக..!

Austria order non-vaccinated people in Covid-19 lockdown

ஆஸ்ட்ரியாவில் இதுவரை 65 சதவீத மக்கள் மட்டுமே முழுமையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளார்களாம். மேற்கு ஐரோப்பியாவில் உள்ள மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் இது குறைந்தபட்ச எண்ணிக்கையாக உள்ளது. கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் விகிதத்தை அதிகரிக்கவே இவ்வாறு ஊரடங்கு போடப்பட்டு உள்ளதாக அந்நாட்டு அதிபர் அலெக்ஸாண்டர் ஸ்கேலஸ்பெர்க் தெரிவித்துள்ளார். 

Austria order non-vaccinated people in Covid-19 lockdown

அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து அங்கு போராட்டங்களும் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த திங்கட்கிழமை அமல்படுத்தப்பட்ட இந்த ஊரடங்கு, வருகிற நவம்பர் 24-ந் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆஸ்ட்ரியாவில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதன் எதிரொலியாக, அண்டை நாடான ஜெர்மனி, ஆஸ்ட்ரியாவில் இருந்து வருபவர்கள் 10 நாட்கள் கட்டாயம் தனிமைப்படுத்தப்பட்டு, பின்னரே நாட்டுக்குள் அனுமதிக்கப்படுவர் என்று அறிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios