40 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மிக சிறப்பான நிகழ்வான அத்தி வரதர் வைபவம் ஜூலை ஒன்றாம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 17ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

46 ஆவது நாளான இன்று அத்தி வரதரை தரிசனம் செய்வதற்காக காஞ்சிபுரத்தில் ஐந்து இலட்சம் மக்கள் கூடி இருக்கின்றனர். இதற்கிடையில் கருடசேவை நடைபெற இருப்பதால் இரவு 8 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை அத்தி வரதர் தரிசனம் அனுமதிக்கப்படுவார்கள். இந்த நிலையில் 45 வது நாளான நேற்று அத்திவரதர் முகத்தில் வியர்வை வருவதாக பக்தர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டது. இது குறித்த ஒரு புகைப்படமும் சமூகவலைதளத்தில் பரவி வந்தது. இதன் காரணமாக அத்தி வரதரை அமிர்தசரஸ் குளத்தில் விரைவில் வைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்தது.

இதுகுறித்து விவரம் அறிந்த ஒருவர், கோவில் மண்டபத்தின் வெப்பம் காரணமாக கூட இப்படி அத்தி வரதர் சுவாமிக்கு வியர்த்து இருக்கலாம் என தெரிவித்து உள்ளார், இருந்தபோதிலும் நாளை மறுதினம் அதாவது ஆகஸ்ட் 17ஆம் தேதி அத்தி வரதர் சயன கோலத்தில் மீண்டும் அமிர்தசரஸ் குளத்தில் வைக்கப்படுவார் என்பது குறிப்பிடத்தக்கது.