ஜல்லிகட்டுக்கும் “ஆதார் கார்டு “....!! முன்பதிவு மும்முரம்...!! களமிறங்கும் காளைகள் ..!!

பல கட்ட போராட்டத்திற்கு பின் , தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது. அதற்கான பல முன்னேற்பாடுகள் தற்போது நடைபெற்று வருகிறது.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு :

அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான ஏற்பாடுகள் மும்மரமாக நடக்கிறது. காளைகளை பரிசோதனை செய்து உடல் தகுதிச் சான்று வழங்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. கால்நடை பராமரிப்புத் துறையின் கட்டுப்பாட்டிலேயே ஜல்லிக்கட்டு நடக்கிறது என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் ஜல்லிக்கட்டு நடைபெறும் நேரம் ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. இருந்தாலும், சில பல காரணங்களால், மீண்டும் ஜல்லிக்கட்டு நடை பெற்றும் தேதி மாற்றி அறிவிக்க பட்டுள்ளது.

வேலைப்பாடு மும்முரம் :

ஜல்லிக்கட்டு நடைபெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜல்லிக் கட்டில் பங்கேற்க உள்ள காளைகளுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது.

ஆதார் கட்டாயம் :

ஜல்லிக்கட்டு காளைகளை பதிவு செய்ய விரும்புவோர், ஜல்லிக்கட்டு காளையின் புகைப்படம் 2 ,உரிமையாளரின் ஆதார் கார்ட் நகல் 2, ஜல்லிக்கட்டு காளை உரிமையாளரின் போட்டோ 2 தேவை என தெரிவிக்கபட்டுள்ளது.

இதன் மூலம் , ஆதாரின் முக்கியத்துவம் ஜல்லிக்கட்டின் வாயிலாகவும் வெளிவருகிறது என்பது குறிபிடத்தக்கது.