தினம் 7 ரூபாய்.. மாதம் 210 ரூபாய்.. ஈசியாக சேமித்து 5000 ரூபாய் பென்ஷன் பெறலாம் - எப்படி? முழு விவரம் இதோ!
Atal Pension Yojana : வங்கி கணக்கு உள்ள, அதே சமயம் வரி செலுத்துபவராக இல்லாத, 18 முதல் 40 வயதிற்குள் உள்ள அனைவரும் இந்த திட்டத்தில் சேரலாம்.
தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பலருக்கும் இருக்கும் ஒரு மிகப்பெரிய கவலை நம் வாழ்நாளில் இறுதிவரை உழைக்க வேண்டுமே என்கின்ற யோசனை தான். காரணம் 58 அல்லது 60 வயதை கடந்த பிறகு நிம்மதியாக ஓய்வெடுக்க வேண்டிய நேரத்தில், பென்ஷன் கிடைக்காமல் தன் வாழ்நாளில் இறுதி நிமிடம் வரை உழைக்க வேண்டிய அவசியத்தில் இருக்கின்றனர் தனியார் நிறுவனங்களை சேர்ந்த ஊழியர்கள்.
இப்பொழுது பல அரசு ஊழியர்களுக்கும் அதே நிலை ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஒருவர் 60 வயதை கடந்த பிறகு அவருக்கு ஓய்வூதியமாக ஐந்தாயிரம் ரூபாய் வரை கிடைத்தால் அது எப்படி இருக்கும்? அது குறித்து தான் இந்த பதிவில் காணவிருக்கிறோம். மத்திய அரசு வெளியிட்டுள்ள "அடல் பென்ஷன் யோஜனா" என்கின்ற திட்டத்தின் மூலம் 18 வயது முதல் 40 வயது வரை உள்ள இந்தியர்கள் இந்த திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம்.
நாட்டின் பாதுகாப்பான நகரம் எது? தேசிய குற்ற ஆவணக் காப்பகம் வழங்கும் டாப் 10 பட்டியல்!
வயது வரம்பு மற்றும் தகுதி
நீங்கள் உங்கள் 18வது வயது முதல் 40ஆவது வயது வரை இந்த திட்டத்தில் சேர வாய்ப்பு அளிக்கப்படும். இதற்கு நீங்கள் ஒரு இந்திய குடிமகனாகவும் உங்கள் பெயரில் ஒரு வங்கிக் கணக்கு அல்லது தபால் நிலைய கணக்கு இருந்திருந்தால் போதும். 60 வயதை தாண்டி, ஓய்வூதியமாக 5000 ரூபாயை தாண்டியும் கூட இந்த திட்டத்தின் மூலம் உங்களால் பெற முடியும். அதற்கு நீங்கள் மாதம் தோறும் செலுத்தும் பணத்தின் அளவு அதிகமாக இருக்க வேண்டும். சரி இதுகுறித்து ஒரு சிறிய கணக்கீட்டை பின்வருமாறு காணலாம்
நீங்கள் அறுபது வயதிற்கு பிறகு 5000 ரூபாயை மாதம் தோறும் ஓய்வூதியமாக பெற வேண்டும் என்றால் நீங்கள் 18 வயது முதல் உங்கள் முதலீட்டை செய்ய வேண்டும், 18 வயது இருக்கும்போது மாதம் 210 ரூபாயை இந்த திட்டத்தில் செலுத்தினால் உங்களுக்கு 60 வயதிற்கு பிறகு 5000 ஓய்வூதியமாக கிடைக்கும். 19 வயதில் நீங்கள் துவங்கினால் 5000 ரூபாயை பெற 228 ரூபாய் மாதம் சேமிக்க வேண்டி இருக்கும்.
அதேபோல 20 வயதில் இருந்து தொடங்கினால் மாதம் 248 ரூபாயும், 21 வயதில் இருந்து தொடங்கினால் மாதம் 259 ரூபாயும், 22 வயதிலிருந்து தொடங்கினால் மாதம் 292 ரூபாயும், 23 வயதில் இருந்து துவங்கினால் மாதம் 318 ரூபாயும், 24 வயதில் துவங்கினால் 346 ரூபாயும், 25 வயதில் தொடங்கினால் 376 ரூபாயும், 26 வயதில் தொடங்கினால் 409 ரூபாயும், 27 வயதில் துவங்கினால் 446 ரூபாயும், 28 வயதில் துவங்கினால் 485 ரூபாயும், 29 வயதில் துவங்கினால் 529 ரூபாயும், 30 வயதில் தொடங்கினால் 577 ரூபாயும் செலுத்த வேண்டியிருக்கும். இதுபோல 40 வயது வரை சுமார் 1454 ரூபாய் மாதம் தோறும் செலுத்துவதன் மூலம் நீங்கள் 60 வயதிற்கு பிறகு 5000 ரூபாயை ஓய்வூதியமாக பெறலாம் .
1454 ரூபாய் என்பது இதற்கான உச்சவரம்பு அல்ல நீங்கள் உங்களுக்கு விருப்பமான தொகையை மாதம் தோறும் சேமிக்கலாம். 18 வயதில் இருந்து நீங்கள் ஆரம்பித்தால், ஒரு நாளிற்கு 7 ரூபாய் என்று, மாதம் 210 செலுத்தி ஓய்வூதியமாக 5000 பெறலாம்.