ஊரடங்கு உத்தரவு காலத்தில் வீட்டில் முடங்கி இருக்கும் மக்கள் அவரவர் உறவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் வீடியோ கால் மூலம் பாதுகாப்பாய் பேசுவதற்கு வாட்ஸ் அப் நிறுவனம் தற்போது ஒரு வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. இதன் மூலம் நான்கு பேருடன் குழுவாக ஒரே நேரத்தில் வீடியோ கால் செய்து பேச முடியும் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்ந்து அதிகரித்துவரும் இந்த ஒரு தருணத்தில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், மக்கள் அனைவரும் அவரவர் வீட்டில் முடங்கி இருக்கின்றனர். யாரெல்லாம் வீட்டிலிருந்தே பணிபுரிய வாய்ப்பு உள்ளதோ அவர்கள் மட்டும் பணிபுரிகின்றனர். மற்றவர்கள் அவசர தேவைகளுக்காக கூட வெளியில் செல்ல முடியாத ஒரு சூழல் நிலவுகிறது. அதே வேளையில் அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டும் மக்கள் வீட்டை விட்டு அனுமதியுடன் வெளியே வரலாம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த ஒரு நிலையில் தூரத்திலுள்ள உறவினர்களிடமோ அல்லது வேலை நிமித்தமாக உயர் அதிகாரிகளுடனும் சக ஊழியர்களுடன் கான்ஃபரன்ஸ் கால் பேசுவதற்கும் வீடியோ கால் மூலமாக விவரங்களை தெரிந்து கொள்வதற்கும் வசதியாக தற்போது வாட்ஸ்அப் செயலியில் 4 பேர் வரை வீடியோ கால் மூலம் குழுவாக பேசும் வசதியை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

முதலில் பீட்டா பயனர்களுக்கு இந்த வசதி அறிமுகப்படுத்தப்பட்டு பின்னர், படிபடியாக அனைத்து பயனர்களுக்கும் அறிமுகப்படுத்த இருக்கிறது. இதில், அதிகபட்சம் 4 பேர் வரை ஒரே நேரத்தில் தொடர்பு கொள்ளும் வகையில் இந்த வசதி இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.பேஸ்புக் மெசஞ்சர் மூலம் குழுவாக வீடியோ அழைப்பு மேற்கொள்ளும் எண்ணிக்கை வழக்கத்தை விட தற்போது 70 சதவீதம் அதிகரித்துள்ள நிலையில், இது போன்ற போன்ற ஓர் சிறப்பு வசதியை ஏற்படுத்தி உள்ளது வாட்ஸ் அப் நிறுவனம்.இதில் உற்று நோக்க வேண்டிய விஷயம் என்னெவன்றால், வீடியோ கால் மூலம் பேசுவதற்கு தற்போது ஜூம்  செயலி மக்கள் மத்தியில் பெருமளவு பயன்பாட்டில் உள்ளது. ஆனால் இது பாதுகாப்பானது இல்லை என்ற  தகவல் வெளியானதை தொடர்ந்து, தற்போது வாட்ஸ் அப் நிறுவனம் இந்த வசதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது