பதற்றத்தில் டெல்லி..! டிரம்ப் வரும் போது நடந்த அதிர்ச்சி சம்பவம்..! பதறிய டெல்லி முதல்வர்..! 

அமெரிக்க  அதிபர் டிரம்ப்  இந்திய வருகையின் போது வன்முறையை ஏற்படுத்தும் விதமாக
CAA - வுக்கு எதிராக நடந்த போராட்ட த்தில் வன்முறை  வெடித்து உள்ளது. இதில் தலைமை  காவலர் ரத்தன்லால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

போராட்டத்தை கட்டுப்படுத்த முயன்ற போது, கற்களை வீசித் தாக்கியதில் தலைமை காவலர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இவர் கோலக்பூரி காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்

இதன் காரணமாக வடகிழக்கு மாவட்டத்தில் 10 இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

இது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் டிவிட்டர்  பக்கத்தில் ஓர் பதிவு செய்துள்ளார். அதில், "டெல்லியில் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுங்கள். டெல்லியில் நடைபெற்று வரும் வன்முறையை தடுக்க நடவடிக்கை எடுங்கள்". பல இடங்களில் நடந்து வரும் வன்முறை சம்பவங்கள் மன உளைச்சலை ஏற்படுகின்றன. வன்முறைகளை ஒருபோதும் அனுமதிக்க முடியாது" எனவும் டெல்லி முதல்வர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் அவசர அவசரமாக பிரதமர் நரேந்திர மோடி குஜராத்தில் இருந்து டெல்லி புறப்பட்டு சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அதே வேளையில், தாஜ்மஹாலை சுற்றி பார்க்க டிரம்ப் மற்றும் அவரது குடும்பத்தினர் ஆக்ரா வந்தடைந்தனர். பொதுமக்கள் யாரும் தாஜ் மஹாலை சுற்றி பார்க்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த ஒரு நிலையில், டெல்லியில் வன்முறை நடந்து உள்ளதால், ஒரு விதமான பதற்றம் நிலவுகிறது