செயற்கை நகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தாலும், அவை உடலுக்கு சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்னவென்று இங்கு பார்க்கலாம்.
Artificial Nails Health Risks: What You Need to Know : பொதுவாகவே, ஒவ்வொரு இளம் பெண்களும் தங்களது நகம் நீளமாக வளர்ந்து பார்ப்பதற்கு அழகாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அந்த கொடுப்பினை எல்லோருக்கும் அமைவதில்லை. ஆம், ஒரு சிலருக்கு மட்டுமே நகங்கள் நீளமாகவும், பார்ப்பதற்கு அழகாகவும் இருக்கும். சிலருக்கோ நகங்கள் நீளமாக வளராது. அப்படி வளர்ந்தாலும் அது விரைவில் உடைந்துவிடும்.
இதனால் அவர்கள் செயற்கை நகங்களை பயன்படுத்தி தங்களது விரல் நகங்களை அழகாக காட்டுகிறார்கள். செயற்கை நகங்கள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும் மற்றும் கைகளை ரொம்பவே அழகாக காட்டும் என்றாலும், அதனால் சில பக்க விளைவுகள் ஏற்படும் தெரியுமா? அதாவது நீங்கள் செயற்கை நகங்களை பயன்படுத்தும் போது மற்றும் நீக்கும்போது அதற்கு பயன்படுத்தும் அமிலங்கள் மற்றும் பிற ரசாயனங்கள் தேவை. அவை உடலுக்கு பல மோசமான பக்க விளைவுகளை ஏற்படுத்தும். அவை என்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
நகங்கள் பலவீனமாகும் :
நீங்கள் உங்களது கைகளில் செயற்கை நகங்களை அணியும் போது மற்றும் அவற்றை நீக்கும் போது அசிட்டோன் என்ற ரசாயனம் பயன்படுத்துவீர்கள். இந்த ரசாயனமானது உங்களது இயற்கையான நகத்தை பலவீனப்படுத்தி, பிறகு விரைவில் உடைந்துவிடும்.
நகங்களில் அழுத்தம் :
செயற்கை மற்றும் இயற்கையான நகங்களுக்கு இடையிலான பிணைப்பு வலுவாக இருக்கும். ஆனால் நீங்கள் செயற்கை நகங்களை தினமும் பயன்படுத்தினால் அது இயற்கை நகத்தட்டுகளை அழுத்தி பிறகு நகத்தை விரைவாக பலவீனமாக்கிவிடும். மேலும் நகங்களில் பூஞ்சைகள் மற்றும் தொற்று நோய்கள் வர வாய்ப்பு உள்ளன.
சரும அலர்ஜி :
ஜெல், பாலிஷ் போன்ற பல செயற்கை நகப்பொருட்களில் ரசாயனங்கள் உள்ளதால் அவை சருமத்தில் அலர்ஜியை ஏற்படுத்தும். இதன் விளைவாக சருமத்தில் அரிப்பு, சிவந்து போதல், வீக்கம், வறட்சி, சருமம் உறிந்து போதல் போன்றவை ஏற்படும். இந்த அலர்ஜி பிரச்சனையானது நகங்களை சுற்றி மட்டுமல்ல கை, விரல்கள், முகம், கண் இமைகளில் கூட.
நகங்களில் பூஞ்சை தொற்றுகள் வளரும் :
செயற்கை மற்றும் இயற்கை நகத்திற்கு இடையில் ஈரப்பதம் தங்கி பூஞ்சைகள் செழித்து வளரும். இதனால் நகங்களில் அதன் இயற்கை நிறம் மறைந்து, மஞ்சள் அல்லது பழுப்பு, பச்சை போன்ற நிறங்களில் காணப்படும். நகங்களில் பூஞ்சை தொற்றுகள் வளர்ந்தால் நகங்களை சுற்றி வீக்கம், சிவத்தல், வலி, சீழ் பிடித்தல் ஏற்படும்.
புற்றுநோய் :
பியூட்டி பார்லர்களில் உபயோகிக்கும் கருவிகள் சுத்தம் இல்லை என்றால், அதை பயன்படுத்தினால் புற்றுநோய் வரும்.
ரசாயன பாதிப்பு :
செயற்கை நகங்களை அணிய மற்றும் நீக்க பயன்படுத்தும் ரசாயனங்கள் கடுமையானது என்பதால் அவை சருமத்திற்கு வறட்சியை தருவது மட்டுமல்லாமல், எரிச்சலையும் ஏற்படுத்தும். அவற்றின் புகையானது கண் மற்றும் சுவாசத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். ஆகவே செயற்கை நகங்களை குறித்து நன்றாக தெரிந்த பிறகு அவற்றை பயன்படுத்துங்கள்.
நினைவில் கொள் :
உங்களது கை விரல்களில் நகங்கள் இயற்கையாக வளர அடிக்கடி அல்லது ஒவ்வொரு மாதமும் செயற்கை நகங்களை பயன்படுத்த வேண்டாம். குறைந்தது ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கும் கேகே நகங்களை பயன்படுத்துவதை தவிர்க்கவும். தினமும் செயற்கை நகங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக அவற்றை எப்போது பயன்படுத்துவது தான் நல்லது. அப்போதுதான் இயற்கையான நகங்கள் வளர்வதற்கு ஏதுவாக இருக்கும்.