are you having habit of seeing a films ?

ஆபாச படம் பார்க்கும் பழக்கம் உள்ள ஆண்களா நீங்கள் ..? எங்கு சென்று முடிய போகிறது தெரியுமா..?

இந்தியாவில் இன்டர்நெட்டில் மிக எளிதில் கிடைக்கக் கூடிய ஒரு விஷயம் என்னவென்றால்,ஆபாச படம்.

இன்றைய கால கட்டத்தில் சிறு வயதினர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ஆபாச படங்களுக்கு அடிமை ஆகிறார்கள்.

உச்சநீதிமன்றம் சென்ற மனைவி

தன்னுடைய கணவர் ஆபாச படங்களுக்கு அடிமை ஆகி உள்ளார்..தினமும் அந்த வீடியோக்களை பார்த்து...மனதளவில் ஒரு விதமான அடிமைத்தனம் உள்ளது

இதன் காரணமாக எங்களுக்குள் அடிக்கடி சண்டை வருகிறது.எனவே ஆபாச படங்களை எளிதில் கிடைக்க செய்யும் முறையை மாற்றிட முயற்சி மேற்கொள்ள வேண்டும்.

அதுமட்டும் இல்லாமல், ஆபாச படங்கள் பார்த்து பல ஆண்கள் இதற்கு அடிமை ஆகி உள்ளனர்.குடும்ப வாழ்வில் கூட ஈடுபாடு குறைந்து விடுகிறது என கூறி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார் ஒரு பெண்மணி.

தாம்பத்யத்தில் ஈடுபாடு குறைவு

ஆபாச படம் பார்ப்பதால் தாம்பத்யத்தில் கூட ஈர்ப்பு குறைந்து விடுகிறது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.ஆண்கள் அடிக்கடி இது போன்ற வீடியோ பார்ப்பதில் ஆர்வம் காட்டி விட்டால், மனைவியுடன் எந்த வித தாம்பத்ய ஈர்ப்பும் குறைந்து விடுகிறதாம்.. இதனால் டைவர்ஸ் வரை செல்கின்றனர்....

பெண்களுக்கு ஆபத்து

ஆபாச படங்களை பார்ப்பதால், பல ஆண்கள் சந்தர்பத்தை எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பதாகவும், எந்த பெண் கிடைத்தாலும் உடலுறவு வைத்துக் கொள்ளள வேண்டும் என நினைக்கும் அளவிற்கு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் பாதிக்கப்படுவதால்,பெண்களுக்கு பாலியல் தொல்லை அதிகரித்து வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது

அதற்கேற்றார் போல்,பாலியல் வன்கொடுமைகள் அதிகளவில் நடைபெற்று வருகிறது

இது குறித்து வருகிறது தீர்ப்பு

தற்போது இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் உள்ளதால், இது குறித்த தீர்ப்பு மிக விரைவில் வெளிவரும் என எதிர்பார்க்கப் படுகிறது.

இதற்கு முன்னதாக இதே போன்ற ஒரு வழக்கு 2013 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றத்திற்கு வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

 எனவே இது குறித்த ஒரு தீர்வு மிக விரைவில் வெளிவர வாய்ப்பு உள்ளது.