ஒருவிதமான பயம், மன அழுத்தம் இவை இரண்டிற்கும் அலர்ஜிக்கும் தொடர்பு உள்ளதா என்றால்.. ஆம் என்றே ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

உதாரணம்: தும்பல், இரும்பல், தொண்டை வறட்சி, தொடர் தலைவலி, உள்ளிட்டவை, ஒருசில குறிப்பிட்ட நேரத்தில் அலர்ஜி போன்று நமக்கு ஏற்பட்டால், அப்போது நம் மனநிலைமை ஒரு விதமான மன அழுத்தத்திற்கு உள்ளாகும். சரி இதில் அலர்ஜிக்கு என்ன வேலை என்று கேட்கிறீர்களா? 

மன அழுத்தத்திற்கும் அலர்ஜிக்கும் தொடர்பு உண்டு. ஒரு குறிப்பிட்ட விஷயத்திற்கு அலர்ஜி ஆகும் போது ஒன்று அல்லது இரண்டு நாட்கள் இருந்தால் அது எந்த ஒரு பிரச்சனையும் ஏற்படுத்தாது. மனதளவில் எந்த பாதிப்பையும் தராது. அதே சமயத்தில் வருடம் முழுவதும் பெரும்பாலான நாட்கள் அலர்ஜியால் உடல்நலம் பாதிக்கப்பட்டால் அது ஒருவிதமான மன அழுத்தத்தை நம்முள் கொடுக்கும். இதன் காரணமாக மாணவர்களுக்கு படிப்பில் கவனம் இல்லாமல் போகும். வேலையில் ஆர்வம் இருக்காது. உடல்நலத்தில் எப்போதும் ஒருவிதமான பயம் இருக்கும். வெளியில் சென்றால் கூட அவர்களுக்கு சந்தோஷமான சூழல் அமையாது.

எப்போதுமே எதை உண்டாலும் இப்படி ஆகிவிடுமோ அப்படி ஆகிவிடுமோ என ஒருவிதமான பயம் இருந்துகொண்டே இருக்கும். காலப்போக்கில் இதுவே ஒரு விதமான மன அழுத்தத்தையும் கொடுக்கும் உதாரணத்திற்கு அலர்ஜியை தவிர்த்து, இதயநோய் புற்றுநோய் இது போன்ற நோய்கள் நம்மை தாக்கி விட்டது என்று தெரிந்தாலே போதும். அதை  நினைத்து நினைத்து ஒரு விதமான மன அழுத்தத்திற்கு சென்றுவிடுவோம். 

சரி இதனை எப்படி கொஞ்சமாவது குறைத்துக் கொள்ளலாம் என்பதை பார்க்கலாமா?

மெடிடேஷன், உடற்பயிற்சி, நல்ல உறக்கம், நல்ல உணவு, சத்தான உணவை முதலில் எடுத்துக் கொள்ளவேண்டும். அதே சமயத்தில் நம் வாழ்க்கைப் பயணத்திலும் சில மாற்றங்களை கொண்டு வரவேண்டும். முதலில் நம் படுக்கையறையை தூய்மையாக வைத்திருக்க வேண்டும். வாரத்திற்கு இரண்டு முறையாவது வீட்டை சுத்தம் செய்ய வேண்டும். கதவு ஜன்னல்களை மூடி வைப்பதும் பகலில் திறந்து வைப்பதும் மிகவும் நல்லது.

வீட்டில் எந்த ஒரு கெட்ட பாக்டீரியா உள்ளே வராமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். கொசுக்களும் உள்ளே வராது. வீட்டை சுத்தம் செய்யும் போது தன்னை பாதுகாத்துக்கொள்ள மாஸ்க் அணிய வேண்டும்.

சிகரெட் பழக்கம் உள்ளவர்கள் கண்டிப்பாக அலர்ஜி இருக்குமேயானால் தவிர்ப்பது  நல்லது. இல்லையென்றால் காலப்போக்கில் இதுவே ஒரு விதமான மன அழுத்தத்தை கொடுக்கும்.