Asianet News TamilAsianet News Tamil

April Fool's Day 2024 : ஏப்ரல் 1 ஏன் முட்டாள்கள் தினம்..? சில சுவாரஸ்யமான கதைகள் இதோ!!

ஏப்ரல் 1ம் தேதி ஏன் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி பல கதைகள் உள்ளன. அதில் சில முக்கிய கதைகளை பற்றி இங்கு பார்க்கலாம்.

april fools day 2024 why we celebrate 1 april as fools day in tamil mks
Author
First Published Apr 1, 2024, 10:52 AM IST

இன்று ஏப்ரல் 1ஆம் தேதி. இந்த நாள் உலகம் முழுவதும் முட்டாள்கள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. மக்கள் தங்கள் நண்பர்கள், நெருங்கியவர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களை ஏமாற்றி இந்த நாளை கொண்டாடுகிறார்கள். தங்களுக்கு நெருக்கமானவர்களை பல வழிகளில் ஏமாற்றுவார்கள். முதலில் ஏதாவது ஒரு காரணம் சொல்லி அவர்களை நம்ப வைப்பார்கள்; அவர்கள் ஏமாந்ததும் 'ஏப்ரல் ஃபூல்' என்று சொல்லி கத்துவார்கள். இப்படியாக இந்த தினத்தை உற்சாகமாகக் கொண்டாடுவார்கள். இந்த தினம் பல நூற்றாண்டுகளாக பல்வேறு கலாச்சாரங்களால் கொண்டாடப்படுகிறது.

முன்னதாக இந்த நாள் பிரான்ஸ் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டுமே கொண்டாடப்பட்டது. ஆனால் படிப்படியாக ஏப்ரல் முட்டாள் தினம் உலகம் முழுவதும் கொண்டாடத் தொடங்கியது. 'ஏப்ரல் முட்டாள்கள் தினம்' (ஏப்ரல் 1) கொண்டாடப்படுவதற்குப் பின்னால் பல கதைகள் உள்ளன. இந்த நாளின் வரலாற்றை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்...

ஏப்ரல் முட்டாள்கள் தினம் இப்படித்தான் தொடங்கியது:
ஏப்ரல் 1 அன்று ஏன் ஏப்ரல் முட்டாள்கள் தினம் கொண்டாடப்படுகிறது என்பதற்கு உறுதியான ஆதாரங்கள் இல்லை என்றாலும், அதைப் பற்றி பல கதைகள் பரவலாக உள்ளன. அதில் ஒன்றின் படி, ஏப்ரல் முட்டாள் தினம் 1381 இல் தொடங்கியது. அப்போதைய அரசர் இரண்டாம் ரிச்சர்ட் மற்றும் பொஹேமியா ராணி அன்னே ஆகியோர் 1381 ஆம் ஆண்டு மார்ச் 32 ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்யப் போவதாக அறிவித்ததாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்த செய்தியைக் கேட்டதும் பொதுமக்கள் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர். ஆனால் மார்ச் 31, 1381 அன்று, மார்ச் 32 வரப்போவதில்லை என்பதை மக்கள் உணர்ந்தனர். இதன் பின்னர் மக்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை புரிந்து கொண்டனர். அன்றிலிருந்து மார்ச் 32, அதாவது ஏப்ரல் 1-ம் தேதி முட்டாள்கள் தினமாகக் கொண்டாடத் தொடங்கியதாகக் கூறப்படுகிறது. சில கதைகளின்படி, ஏப்ரல் முட்டாள் தினம் 1392 இல் தொடங்கியது. 

அதனால்தான் 'ஏப்ரல் முட்டாள்கள் தினம்' கொண்டாடப்படுகிறது சில கதைகளின்படி, முன்னதாக ஐரோப்பிய நாடுகளில் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டு கொண்டாடப்பட்டது. ஆனால், போப் கிரிகோரி 13 புதிய நாட்காட்டியை ஏற்றுக்கொள்ள உத்தரவிட்டபோது,   ஜனவரி 1 முதல் புத்தாண்டு கொண்டாடத் தொடங்கியது. சிலர் இன்னும் ஏப்ரல் 1 ஆம் தேதி புத்தாண்டைக் கொண்டாடுகிறார்கள். அந்தக் காலத்தில் இப்படிப்பட்டவர்கள் முட்டாள்களாகக் கருதப்பட்டு கேலி செய்யப்பட்டார்கள். ஏப்ரல் முட்டாள் தினம் இப்படித்தான் தொடங்கியது. இருப்பினும், 19 ஆம் நூற்றாண்டில், ஏப்ரல் முட்டாள் தினம் மிகவும் பிரபலமாகிவிட்டது.

இந்தியாவில் எப்போது தொடங்கியது?
ஏப்ரல் 1 அன்று உலகம் முழுவதும் ஏப்ரல் முட்டாள்கள் தினத்தை கொண்டாட பல்வேறு வழிகள் உள்ளன. ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து மற்றும் ஆப்பிரிக்க நாடுகளைப் பற்றி பேசினால், அங்கு ஏப்ரல் முட்டாள் தினம் 12 மணி வரை மட்டுமே கொண்டாடப்படுகிறது. அதே நேரத்தில், கனடா, அமெரிக்கா, ரஷ்யா மற்றும் பிற ஐரோப்பிய நாடுகளில், ஏப்ரல் 1 அன்று நாள் முழுவதும் ஏப்ரல் முட்டாள் தினம் கொண்டாடப்படுகிறது. சில அறிக்கைகளின்படி, இந்த நாள் 19 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் தொடங்கப்பட்டது. இப்போதெல்லாம், இந்தியாவில் கூட, மக்கள் இந்த நாளில் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் இருக்கிறார்கள்.

Follow Us:
Download App:
  • android
  • ios