தயாரிப்பை கைவிடுகிறது ஆப்பிள் .....??? அதிருப்தியில் மக்கள் ....!!!

ஆப்பிள் நிறுவனம் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது , ஆப்பிள் நிறுவனத்தின் ஸ்மார்ட் போன்ஸ் மட்டுமே.....ஸ்மார்ட் போனின் வளர்ச்சியை தொடர்ந்து தற்போது, “டைட்டன் “ என்ற எலக்ட்ரிக் கார் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது ஆப்பிள் .

இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக பாப் மேன்ஸ்பீல்டு என்பவரை நியமனம் செய்தது ஆப்பிள் நிறுவனம் . ஆப்பிள் நிறுவனத்துக்கு, ஐ பேட் தயாரிக்க உதவியவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர், ஆப்பிள் நிறுவனத்தின் ஏலேக்ட்ரோனிக் காரை வடிவமைக்க, உலகின் தலைசிறந்த பொறியாளர்கள் உள்பட சுமார் 1000 பேர் கொண்ட குழு , இந்த டைட்டன் திட்டத்தில் இரவு பகலாக பணியாற்றி வருகிறது. ஆனால், வரும் 2019ம் ஆண்டில் தனது கனவு காரை, வெளியிட இருந்த ஆப்பிள் நிறுவனம் , தற்போது இந்த திட்டத்தை கைவிடும் முயற்சியில் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.இதனால் நூற்றுக்கணக்கானோர் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சிலர் பேர் ஆப்பிள் நிறுவனத்தின் இதர பிரிவுகளில் மாற்றப்பட வாய்ப்புள்ளது’ என்றும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், எலக்ட்ரிக் கார் குறித்த தகவலை அடுத்த ஆண்டுக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று குழுவுக்கு காலக்கெடு இருப்பதால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என தெரிகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் காரை எதிர்பார்த்து கொண்டிருக்கும் ஆப்பிள் பிரியர்களுக்கு, இந்த செய்தி கொஞ்சம் அதிருப்தி தான்..............!!!