apology to parents

பெற்ற தாயும் தந்தையும் என்றும் தம் குழந்தைகள் நலனுக்காகவே பாடுபடுபவர்கள். எந்த நிலைமையிலும் தன் பிள்ளைகளை சுமையாக நினைத்து பார்க்காதவர்கள் என்றால் நம் பெற்றோர்கள் தான்.

ஒரு மகனாகவோ மகளாகவோ, நம் பெற்றோருக்கு எத்தனையோ கஷ்டம் கொடுத்து இருப்போம். சண்டைப்போட்டு இருப்போம், பல சிரமத்திற்கு ஆளாகி இருப்போம், ஆனால் இது எல்லா வற்றையும் மறந்து இன்று நம் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கலாம்.

அதாவது செய்த தவற்றிற்கு தங்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்கும் நாளாக இன்று கடைப்பிடிக்கப்படுகிறது (Forgive Mom and Dad day)

எனவே யாரெல்லாம் தங்கள் பெற்றோரிடம் மன்னிப்பு கேட்க விரும்புகிறீர்களோ, உடனே கேட்டு விடுங்கள்.அவர்களும்மன நிறைவு அடைவர், நீங்களும் மன நிறைவோடு செயல்படலாம் .

அதுமட்டுமின்றி, Quilting Day, Awkward Moments Day, Companies That Care Day ஆகிய தினங்களும் இன்று கடைபிடிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது