கொரோனாவை ஒழிக்க "கிருமிநாசினி" ரெடி..! அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் அசத்தல்..!
  
உலக நாடுகளை பெரும் பீதிக்குள்ளாக்கிய கொரோனா வைரஸ் தாக்கம் கட்டுக்குள் வருமா என்ற எதிர்பார்ப்பு  தற்போது கிளம்பி உள்ளது. வளர்ச்சி அடைந்த நாடுகள் மிக தீவிரமாக கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசியை  கண்டுபிடிக்கும் பணியில் இறங்கி உள்ளன.

இந்த ஒரு நிலையில் கொரோனா வைரஸை அழிக்கும் தன்மை கொண்ட கிருமிநாசினி உருவாக்கும் ஆராய்ச்சியில் சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி மாணவர்கள் ஈடுபட்டனர். அதன்படி தற்போது "ஏ.யூ என்ற சானிடைசர்" என்ற ஒரு கிருமி நாசினி யை கண்டுபிடித்து உள்ளது.

இது குறித்து என்.எச்.எச்.ஐ.டி.,யைச் சேர்ந்த பேராசிரியர் ஓருவர் தெரிவிக்கும் போது, 

இந்த கிருமி நாசினி கொரோனா வைரஸை அழிக்க வல்லமை கொண்டது என்பதை நாங்கள் மரபணு சோதனை மூலம் உறுதிப்படுத்தி உள்ளோம் என குறிப்பிட்டுள்ளார். அதற்கான காரணத்தையும் தெளிவுபடுத்தியுள்ள அவர், "தாங்கள் தயாரித்துள்ள கிருமிநாசினியில் இருக்கக்கூடிய அமிலமும் கரோனா வைரஸில்  இருக்கக்கூடிய அமிலமும் ஒரே வகையானது என தெரிவித்துள்ளனர்.

தற்போது இந்த கிருமி நாசினி குறித்து காப்புரிமை பெறுவதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகளுடன் இணைந்து செயல்பட அண்ணா பல்கலை கழகம் தயாராக உள்ளது என்றும் தெரிவித்து உள்ளனர்.

ஒரு நாளைக்கு குறைந்தது 15 முறையாவது கை-களை நன்கு கழுவ வேண்டும் என மருத்துவர்களும்  தெரிவித்து வரும் நிலையில் இந்த கிருமி நாசினி மிக பெரிய வரப்பிரசாதமாக அமையும். இதன் மூலம்  கொரோனா பரவுதலை ஓரளவிற்கு கட்டுப்படுத்த முடியும் என நம்பப்படுகிறது.