தாய்ப்பாசத்துடன் எமி ...! வெளியான அடுத்த லெவல் மாஸ் புகைப்படம்..!

பிரபல பாலிவுட் நடிகையான எமி  ஜாக்சனுக்கு சமீபத்தில் குழந்தை பிறந்தது. எமிஜாக்சனை பொருத்தவரையில் மகப்பேறு நடக்கும் அந்த ஒரு தருணம் வரை மிகவும் பிஸியாக தன்னுடைய நடிப்பில் ஆர்வம் செலுத்தி வந்தார்.

இந்த நிலையில் தன்னுடைய அழகிய குழந்தையை தாய் பாசத்தோடு மார்பின் மீது படுக்க வைத்து போட்டோ எடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது ஒரு பக்கம் இருக்க குழந்தை பெற்றெடுத்ததற்கான ஓர் அடையாளம் கூட இல்லாத அளவிற்கு தன்னுடைய உடம்பை மிகவும் பிட்டாக வைத்துள்ளார் எமிஜாக்சன். பொதுவாக பெண் குழந்தை பிறந்தால் உடல் பருமன், தொப்பை அதிகரிப்பது, முதுகுவலி ,ஒருவிதமான சோர்வு என சாதாரணமாக பார்க்க முடியும். பெண்களும் இது போன்ற சில விஷயங்களை அவ்வப்போது சொல்வார்கள்.

ஆனால் எமிஜாக்சனை பார்க்கும்போது ஒரு சிறு மாற்றம் கூட தெரியவில்லை மனதளவிலும் உடலளவிலும் இன்றளவும் ராக்ஸ்டாராக தான் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்க்கும் சமூக வலைத்தளவாசிகள் எமிஜாக்சனின் நம்பிக்கைக்கு ஆதரவு தெரிவித்து தொடர்ந்து கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.