சிறுவயது அமித்ஷா..! சமூக வலைத்தளத்தில் தீயாய் பரவும் உள்துறை அமைச்சரின் ஸ்மார்ட்  போட்டோ...! அவர் அப்பவே அப்படி...!

நம் வயது அதிகரிக்க அதிகரிக்க என்றாவது ஒருநாள் திரும்பி பார்க்கும் போது நாம் கடந்து வந்த பாதை நினைவுக்கு வரும் அப்போது நம் வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்கள் ஒரு விதத்தில் மகிழ்ச்சியை தருவதாக இருக்கும், மற்றொரு விதத்தில் வாழ்க்கை என்பது இவ்வளவு தானா என சிந்திக்க வைக்கும், ஒரு சில விஷயங்கள் கசப்பானதாக இருக்கும் இன்னும் சொல்லப்போனால் மறக்க முடியாத சம்பவமாக கூட இருக்கும்.

இதையெல்லாம் கடந்த பிறகுதான் அனுபவம் என்று ஒன்று நமக்கு கிடைக்கும். அப்படி ஒரு அனுபவம் கிடைக்கும் போது நம் வயதோ குறைந்தது 40 முதல் 50 ஆவது இருக்கும்.இதற்கு ஒரு அழகிய உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால், சிறு வயதில் நாம் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடுத்தர வயது ஆகும் போதோ அல்லது வயது முதிர்வு அடையும் போதோ பார்த்தோமேயானால் நமக்குள் ஒருவிதமான சந்தோஷம் ஏற்படும். மலரும் நினைவுகளில் மூழ்கி கிடக்கவேண்டிய ஒரு அற்புதமான நீங்கா நினைவாக இருக்கும்.

அப்படி ஒரு விஷயமாக பார்க்கப்படும் ஒரு நிகழ்வு என்னவென்றால் தற்போது உள்துறை அமைச்சராக இருக்கக் கூடிய அமித்ஷாவின் சிறுவயதில் எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது. ஏன் அப்படி என்றால்? இப்போது இருக்கும் அமித்ஷா சிறுவயதில் எப்படி உள்ளார் பாருங்களேன் என சொல்லும் அளவுக்கு மிகவும் ஒல்லியாக ஸ்மார்ட் லுக்ல இருக்கிறார்.

மேலும் இந்த போட்டோவை பார்க்கும் பலரும் அமித்ஷாவா இது என ஆச்சரியமாக விமர்சனம் செய்யவும் தொடங்கியிருக்கின்றனர்.